This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday, October 11, 2008

வேம்பு பூச்சி மருந்து

பல்கலை தயாரிப்பில் வேம்பு பூச்சி மருந்து!



புது டெல்லி: இந்தியாவின் முன்னணி பல்கலைக் கழகங்களில் ஒன்றான தபார் பல்கலைக் கழகம் (Thapar University) வர்த்தக ரீதியாக வேம்பு பூச்சி மருந்து தயாரிக்க போவதாக அறிவித்துள்ளது.


இந்த பல்கலைக் கழகத்தில் உள்ள தொழிலகத்திலேயே, வேம்பு பூச்சி மருந்து தயாரிக்கப்படும்.



இந்த பல்கலைக் கழகமும், பஞ்சாப் மாநில விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப குழுவும் இணைந்து வேம்பு பூச்சி மருந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.



இங்கு முதலில் மணிக்கு 50 கிலோ வேம்பு பூச்சி மருந்து தயாரிக்கும் இயந்திரங்கள் நிறுவப்படும். இதன் மூலம் வருடத்திற்கு நான்கு டன் வேம்பு பூச்சி மருந்து தயாரிக்கப்படும்.


இதற்கு தேவையான வேப்ப இலை, வேப்பங் கொட்டை ஆகியவைகளுக்கா வேப்ப மரம் வளர்க்கப்படும். இந்த வேப்ப மரங்கள் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப தொழில் முனைவோர் பூங்காவில் வளர்க்கப்படும். இதிலிருந்து பூச்சி மருந்து தயாரிக்க தேவையான வேப்பங் கொட்டை பெறப்படும்.

இது குறித்து தபார் பல்கலைக் கழகத்தின் இயக்குநர் டாக்டர் அரிஜித் முகர்ஜி கூறுகையில், எங்களுக்கு இயற்கை பூச்சி மருந்துகளின் தேவை அதிக அளவு இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதை தயாரிக்க சிறிய அளவிலான தொழிற்சாலைகளுக்கு சிறந்த வாய்ப்பு உள்ளது.


ரசாயண உரம், பூச்சி மருந்துகள் பயன்படுத்தாமல் செய்யும் இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. இதில் பயன்படுத்தப்படும் இயற்கை உரம், பூச்சி மருந்துகள் சுற்றுச் சூழலுக்கு ஏற்றது. எவ்வித தீங்கும் இல்லாதது.

இவ்வகை பூச்சி மருந்துகள் பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது. இவை சுற்றுச் சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. நிலத்தடி நீர், மண் வளத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்று டாக்டர் அரிஜித் முகர்ஜி தெரிவித்தார்.


இதன் எதிர்கால திட்டம் பற்றி டாக்டர் அரிஜித் முக்ரஜி கூறுகையில், இந்த பூச்சி மருந்து தயாரிப்பதன் மூலம், இதை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் பயன்படுத்த ஊக்குவிக்கப்படும். இதன் மூலம் பஞ்சாப்பில் சுற்றுச் சூழல் பாதிப்பு இல்லாத விவசாயம் மேற்கொள்ளப்படும்.


இந்த வருடம் ஜீலை, ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களில் 22 டன் வேப்பங் கொட்டை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்த பூச்சி மருந்து தயாரிக்கப்பட்ட பிறகு, பல்கலைக் கழகத்தை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகளின் கூட்டம் நடத்தப்படும். இதில் பல்கலைக் கழக ஊழியர்கள், ரசாயண உரத்தை பயன்படுத்துவதால் நிலத்தடி நீர், மண் வளம், உணவு தானியங்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி விளக்குவார்கள்.


இவர்களுக்கு இயற்கை பூச்சி மருந்து பயன்படுத்த வேண்டிய முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு உண்டாக்குவார்கள். இதே போல் பல்கலைக் கழகத்திலும் விவசாயிகளின் கூட்டங்கள் நடத்தி விளக்கப்படும் என்று தெரிவித்தார்.

Friday, September 26, 2008

புதிய சான்றிதழ் படிப்புக்கள்

வேளாண் பல்கலையில் புதிய சான்றிதழ் படிப்புக்கள் அறிமுகம்!
வேளாண்சார் தொழில்நுட்பங்களில் 5 புதிய சான்றிதழ் படிப்புகளை கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த பல்கலைக் கழகத்தின் தொலைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ், நில எழிலூட்டல், அலங்காரத் தோட்டம் அமைத்தல், நாற்றங்கால் தொழில்நுட்பம், வணிகரீதியிலான தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள், நவீன களை மேலாண்மை, மண்வள மேலாண்மை ஆகிய சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகிறது.
வேளாண்சார் தொழில்களை துவங்கும் வகையில் இப்பாடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த நவம்பரில் பாடங்கள் துவங்கப்படும்.
இந்த சான்றிதழ் படிப்புக்களில் ஆங்கிலத்தில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் சேரலாம்.
இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் இயக்குநர், தொலைநிலைக் கல்வி இயக்ககம், வேளாண் பல்கலைக்கழகம், கோவை - 641003 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி எண்கள் 0422-6611229, 6611429
நன்றி-

Monday, September 22, 2008

கோழி வகைகள்

மத்திய பறவை
ஆராய்ச்சி நிறுவன (CARI)-த்தின்

இனங்கள் நாட்டுக் கோழி வகைகள்


கரி-நிர்பீக் (ஏசெல் கலப்பு)






  • உண்மை அல்லது தூய்மை என்பதே “ஏசெல்” என்பதன் அர்த்தம் ஆகும். 
    இவ்வகை கோழிகள், சக்திவாய்ந்த, உறுதியான, திடமான வெளித்தோற்றம், கம்பீரமான
    நடை, உறுதியான சண்டை போடும் திறன் கொண்டவை.  இதன் சண்டை போடும்
    திறனைக் கொண்டே ஏசெல் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
  • இதன் தோற்றம் ஆந்திரப் பிரதேச மாநிலம் எனத் தெரிகிறது.  இவ்வகை
    மிகவும் அரிதாகக் இருந்தாலும் சேவல் சண்டைக் காட்சி நடத்துபவர்களிடம்
    காணப்படுகிறது.
  • ஏசெல் இனம், திடகாத்திரமான, மதிப்பான பார்வை கொண்ட இனமாகும்.
  • சேவல் எடை 3-4 கிலோவாகவும், கோழி எடை 2-3 கிலோவாகவும் உள்ளது.
  • 196 நாட்களில் பருவம் அடைகிறது.
  • வருட முட்டை உற்பத்தி (எண்ணிக்கை) 92
  • 40வது வாரத்தில் முட்டை எடை (கிராம்) 50

கரி-சியாமா (கடகநாத் கலப்பு)





பொதுவாக “கலாமாசி” என்று அழைக்கிறார்கள்.  கருப்பு சதையுடைய பறவை
என்பது இதன் அர்த்தம்.  மத்திய பிரதேச மாநில தாபுவா மற்றும் தார்
மாவட்டமும் அருகில் உள்ள ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநில மாவட்டமும்,
அதாவது 800 சதுர மைல் பரப்பு இவ்வகை இனத்தின் தோற்றம் ஆகும்.


  • பழங்குடியினர், ஆதிவாசிகள், ஏழை கிராம மக்கள் ஆகியோர் இவ்வகைக்
    கோழிகளை வளர்க்கின்றனர்.
  • சேவல் பலிக்காக பயன்படுகிறது.  அதாவது தீபாளிக்குப் பின்
    கடவுளுக்கு பலி கொடுக்கப்படுகிறது.
  • கோழிக் குஞ்சுகள் நீலம் மற்றும் கருப்பு நிறத்துடன், பிற்பகுதியில்
    கருப்பு கோடுகளுடன் காணப்படுகிறது.
  • கறி கருப்பாக, பார்வைக் ஏற்றதாக இல்லாமல் இருந்தாலும், சுவையாகவும்,
    மருத்துவ குணங்கள் நிறைந்தும் காணப்படுகிறது.
  • பழங்குடியினர், கோழி இரத்தத்தையும், கறியையும், கடும் நோய்களுக்கு
    மருந்தாக பயன்படுத்துகின்றனர்.
  • கறி மற்றும் முட்டையில் நல்ல புரதச் சத்தும் (25.47% கறியில்)
    இரும்புச் சத்தும் உள்ளது.
  • உடல் எடை  40 வாரத்தில் 920 கிராம்
  • பருவ வயது (நாட்கள்) - 180
  • வருட முட்டை உற்பத்தி எண்ணிக்கை - 105
  • முட்டை எடை 40 வாரத்தில் (கிராம்) - 49
  • கருவுற்றல் (%) -  55
  • கோழிக்குஞ்சு பொரிக்கும் திறன்  - 52 %

ஹிட்கரி (நேக்கட் நெக் கலப்பு)



  • நீலமான உருண்டை வடிவ கழுத்துடைய இனமாகும்.  பெயரில் உள்ளது போல்,
    பறவைகளின் கழுத்து வெறுமையாக உள்ளது.  அல்லது, கழுத்தின்
    முற்பகுதியில் கொத்தாக சிறகுகள் உள்ளன.
  • பருவ நிலையை அடையும் பொழுது, சேவலின் தோல் சிவப்பு நிறத்திற்கு
    மாறிவிடுகிறது.
  • கேரளாவின், திருவனந்தபுரப் பகுதி இவ்வகை இனத்தின் தோற்றம் ஆகும்.
  • 20 வாரத்தில் உடல் எடை 1005 கிராம்
  • பருவ வயது (நாட்கள்) -  201
  • 40 வாரத்தில் முட்டை எடை - 54 கிராம்
  • கருவுற்றல் (%) - 66
  • கோழிக்குஞ்சு பொறிக்கும் திறன் (%) - 71

யு.பி.-கரி (பிரிசில் கலப்பு)


Frizzle Cross.JPG


  • துப்புரவு குணமுடைய, உள்நாட்டு தோற்றமுடைய, நமது சுழலுக்கு ஏற்ற, நோய்
    எதிர்ப்பு திறன் கொண்ட, நல்ல வளர்ச்சியும், உற்பத்தி திறனும் கொண்ட
    இனமாகும்.
  • வீட்டிலியே வளர்ப்பதற்கு ஏற்ற இனமாகும்.
  • வெவ்வேறு வேளாண் காலநிலைக்கு ஏற்ற 4 இரகங்கள் உள்ளன.

    1. கடகநாத் - டெல்கம் ரெட் கலப்பு
    2. ஏசெல் - டெல்கம் ரெட் கலப்பு
    3. நேகட் நெக் - டெல்கம் ரெட் கலப்பு
    4. பிரிசில் - டெல்கம் ரெட் கலப்பு

குணாதிசயங்கள்


  • பருவ வயது  : 170 - 180 நாட்கள்
  • வருட முட்டை உற்பத்தி 165-180 முட்டைகள்
  • முட்டை எடை - 52-55 கிராம்
  • முட்டை நிறம் : காப்பி நிறம்
  • முட்டை தரம் :  உயர்ந்த தரம்
  • உயிர்த்திறன் : 95% மேல்
  • சுறுசுறுப்பானது, செடிகளை உண்ணும் குணமுடையது.
முட்டைக்
கோழிகள்


கரிப்பிரியா முட்டைக்
கோழி



  • 17-18 வாரம் முதல் முட்டையிட துவங்குகிறது.
  • 150 நாட்களில், 50% உற்பத்தியை அடைகிறது.
  • 26-28 வாரத்தில் அதிக பட்சம் உற்பத்தியாகிறது.
  • வளர்ப்பு கோழி மற்றும் முட்டைக் கோழியின் வாழ்வுத்திறன் 96% மற்றும்
    94%
  • அதிகபட்ச முட்டை உற்பத்தி (92%)
  • 72 வாரமான கோழி 270 முட்டைகளுக்கு மேல் இடுகிறது.
  • முட்டை அளவு - சராசரியான அளவு
  • முட்டை எடை - 54 கிராம்

கரி-சோனாலி முட்டைக் கோழி (கோல்டன்-92)





  • 18-19 வாரம் முதல் முட்டையிட துவங்குகிறது.
  • 155 நாட்களில் 50% உற்பத்தியை அடைகிறது.
  • 27-29 வாரத்தில், அதிகபட்ச உற்பத்தியாகிறது
  • வளர்ப்பு கோழி மற்றும் முட்டைக் கோழியின் வாழ்வுத் திறன் 96% மற்றும்
    94%.
  • அதிகபட்ச முட்டை உற்பத்தி - 90%
  • 72 வாரக் கோழி 265 முட்டைகளுக்கு மேல் இடுகிறது.
  • முட்டை அளவு       
    :         சராசரியான அளவு
  • முட்டை எடை 54 கிராம்

கரி- தேவேந்திரா

  • நடுத்தர வயதுடைய இருவகைப் பயனுடையது.
  • நல்ல உணவு மாற்றும் விகிதம் கொண்ட இனமாகும்.  உணவுச் செலவிற்கு
    மேல் அதிகமான வரவு கிடைக்கிறது.
  • மற்ற இனங்களை விட உயர்ந்தது. முட்டை பண்ணைகளில் குறைவான இறப்பு
    விகிதம்
  • 8வது வாரத்தில் உடல்
    எடை         1700 - 1800
    கிராம்
  • பருவ வயது  
                      
    :          155 - 160
    நாட்கள்
  • வருட முட்டை உற்பத்தி     
    :         190 - 200

கறிக்கோழிகள்

கரிப்ரோ - விஷால் (கரிப்ரோ-91)





  • முதல் நாளில் கோழியின் எடை 43 கிராம்
  • 6வது வாரத்தில் எடை : 1650 - 1700 கிராம்
  • 7வது வாரத்தில் எடை :  2100 - 2200 கிராம்
  • கோழிகளின் உயிர்பு விகிதம் : 97-98%
  • 6வது வாரத்தில் உணவு மாற்று விகிதம் : 1.94 - 2.20

கரி-ரெயின்ப்ரோ (பி -77)



  • முதல் நாளில் கோழியின் எடை 41 கிராம்
  • 6வது வாரத்தில் எடை  :   1300 கிராம்
  • 7வது வாரத்தில் எடை :   1600 கிராம்
  • கோழிகளின் உயிர்பு விகிதம்  : 98-99%
  • 6வது வாரத்தில் உணவு மாற்று விகிதம்  :  2.3

கரிப்ரோ - தன்ராஜா (பல நிறம் கொண்டவை)





  • முதல் நாளில் கோழியின் எடை 46 கிராம்
  • 6வது வாரத்தில் எடை  :  1600 - 1650 கிராம்
  • 7வது வாரத்தில் எடை  :  2000 - 2150 கிராம்
  • கோழிகளின் உயிர்பு விகிதம்  :  97-98%
  • 6வது வாரத்தில் உணவு மாற்று விகிதம் :  1.90 - 2.10

கரிப்ரோ - மிருத்துஞ்சை (கரி நேகட் நெக்)





  • முதல் நாளில் கோழியின் எடை 42 கிராம்
  • 6வது வாரத்தில் எடை   :   1650 - 1700 கிராம்
  • 7வது வாரத்தில் எடை  :   2000 - 2150 கிராம்
  • கோழிகளின் உயிர்பு விகிதம்  :  97-98%
  • 6வது வாரத்தில் உணவு மாற்று விகிதம்  :  1.9 - 2.0
ஜப்பானியக்
காடை





ஜப்பானியக் காடை கடந்த சில வருடங்களாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் முட்டை மற்றும் கறிக்காக பல காடை பண்ணைகள்
உருவாகியுள்ளன.  தரமான இறைச்சிக்கான விழிப்புணர்வே இதற்கு
காரணம்.

கீழ் கண்ட காரணிகள், காடை வளர்ப்பை பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப
ரீதியாகவும் எளிமையாக்கி உள்ளன


  • மிகக் குறைவான சந்ததி இடைவெளி
  • அதிக நோய் எதிர்ப்பு திறன் கொண்டவை
  • தடுப்பூசி தேவையில்லை
  • குறைவான இடவசதி இருந்தால் போதுமானதாகும்
  • கையாளுவற்கு எளிமை
  • குறுகிய காலத்தில் பருவமடைதல்
  • அதிக அளவில் முட்டையிடும் திறன் - பெண் காடைகள் 42 நாட்களில்
    முட்டையிட துவங்குகின்றன

கரி-உத்த
ம்


  • மொத்த முட்டை பொரிப்புத்திறன்  :   60 - 76%
  • 4 வார எடை   :   150 கிராம்
  • 5 வார எடை :   170 - 190 கிராம்
  • 4 வாரத்தில் தீவனத்திறன்  :  2.51
  • 5 வாரத்தில் தீனவ திறன் :   2.80
  • அன்றாடம் உட்கொள்ளும் தீவன அளவு : 25 - 28 கிராம்

கரி-உஜாவால்


  • மொத்த முட்டைகளின் பொரிப்பு திறன்    
    :   65%
  • 4 வார எடை  :   140 கிராம்
  • 5 வார எடை :   170 - 175 கிராம்
  • 4 வாரத்தில் தீவனத்திறன்  :   2.93
  • அன்றாடம் உட்கொள்ளும் தீவன அளவு : 25 - 28 கிராம்

கரி-ஸ்வேதா


  • மொத்த முட்டைகளின் பொரிப்பு திறன்  :  50-60 %
  • 4 வார எடை    :   135 கிராம்
  • 5 வார எடை :   155-165  கிராம்
  • 4 வாரத்தில் தீவனத்திறன்   :  2.85
  • 5 வாரத்தில் தீனவ திறன்  :   2.90
  • அன்றாடம் உட்கொள்ளும் தீவன அளவு : 25 கிராம்

கரி-பியர்ல்


  • மொத்த முட்டைகளின் பொரிப்பு திறன்  :    65
    - 70 %
  • 4 வார எடை   :    120 கிராம்
  • அன்றாடம் உட்கொள்ளும் தீவன அளவு : 25 கிராம்
  • 50% முட்டை உற்பத்தி வயது :    8 - 10 வாரம்

முட்டை உற்பத்தி      :    285 -
295 முட்டைகள்


கினி
கோழி





  • பெரிதும் நகர்ந்து செல்லக்கூடிய பறவைகள்
  • சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஏற்றது
  • காதம்பரி, சிதம்பரி மற்றும் ஸ்வேதாம்பரி என்ற 3 இரகங்கள் உள்ளன.

சிறப்பு குணங்கள்


  • கடினமாக பறவை
  • அனைத்து வேளாண்கால நிலைக்கும் ஏற்றது
  • குஞ்சுகளைத் தாக்கக்கூடிய அனைத்து வகை நோய்களுக்கும் எதிர்ப்புத்
    திறன் கொண்டவை
  • பெரிய செலவிலான பண்ணைக்கு அவசியமில்லை. நன்குமேயும் திறன்
    கொண்டவை
  • கோழித் தீவனத்திற்கு பயன்படாத அனைத்து வகையான தீவனங்களையும்
    கினிகோழிக்குப் பயன்படுத்தலாம்
  • பூசணம் மற்றும் அப்லோடாக்சின் நச்சை தாங்கவல்லது
  • கடினமான முட்டை ஓடு, முட்டை உடைவதைக் குறைப்பதோடு, நீண்ட நாள்
    வைத்துக் கொள்ளவும் உதவுகிறது
  • இறைச்சியில் அதிக அளவு வைட்டமின் சத்தும், குறைவான கொழுப்புச் சத்தும்
    உள்ளது.

உற்பத்தி பண்புகள்


  • 8 வாரத்தில் எடை  :  500 -  500 கிராம்
  • 12 வாரத்தில் எடை  :   900 -  1000
    கிராம்
  • முதல் முட்டையிடும் வயது  :  230 - 250 நாட்கள்
  • சராசரி எடை :   38 -  40 கிராம்
  • முட்டை உற்பத்தி (ஒரு சுழற்சி மார்ச் - செப்டம்பர்) 100 - 120
    முட்டைகள்
  • கருவுற்றல் 70 -  75%
  • கருவுற்ற முட்டைகளின் பொரிப்புத் திறன் 70 -  80%

வான்
கோழி


கரி-விரட்




  • அகன்ற மார்புடைய வெள்ளை வகை
  • 16 வாரத்தில், கோழிகள் 8 கிலோ எடையும், ஆண் வகைகள் 12 கிலோ எடையும்
    இருக்கும் பொழுது இறைச்சிக்காக விற்கப்படுகிறது.
  • உள்ளுர் சந்தையின் தேவைப்கேற்ப, குறுகிய வயதுடைய வான்கோழிகளை வெட்டி
    வறுப்பதற்கு பயன்படுத்தலாம்.

இனங்கள் பற்றிய விபரங்கள் தெரிய

இயக்குநர்

மத்திய பறவை ஆராய்ச்சி நிறுவனம்,

இசாட்நகர், உத்திரபிரதேசம்

பின்கோடு - 243122

 மின்னஞ்சல் - cari_director@rediffmail.com  

தொலைபேசி - 0581 - 23013220; 2301320;  2301320;  2303223;
 2300204

தொலைநகல் :        
91-581-2301321.


>ஐ.சி.ஏ.ஆர்.
கோழி ஆராய்ச்சித் திட்ட மையத்தின் இனங்கள்


வனராஜா





  • கிராமம் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில், வீட்டுப் பண்ணைகளில்
    வளர்ப்பதற்கு ஏற்றது.  ஐதராபாத்-தில் உள்ள ஐ.சி.ஏ.ஆர்.-கோழி
    ஆராய்ச்சி திட்டம், இதனை வெளியிட்டுள்ளது.
  • பல வண்ணங்களில், கவர்ச்சியான இறகுகளைக் கொண்ட இது ஒரு பயனுள்ள
    பறவையாகும்.
  • அனைத்து வகையான நோய்களுக்கும் எதிர்ப்பு திறன் கொண்டதாகும். 
    வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்றதாகும்.
  • வனராஜா ஆண் இனங்கள், முறையாக தீவன முறைதில் 8 வாரத்தில் நல்ல எடையை
    அடைகின்றன.
  • ஒரு பருவ சுழற்சியில், ஒரு கோழி 160-180 முட்டைகள் இடுகின்றது.
  • குறைவான எடையும், நீண்ட கால்களும் பெற்றிருப்பதால், இவை மற்ற இரைக்
    கொல்லிகளிடம் இருந்து தப்பி ஓடிவிடும். வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்றவையாக
    உள்ளன.

கிரிஷிப்ரோ





  • ஐதராபாத்-தில் உள்ள ஐ.சி.ஏ.ஆர்.-கோழி ஆராய்ச்சி திட்டம் இதனை
    உருவாக்கியுள்ளது.
  • பல வகை நிறங்கொண்ட கறிக் கோழியாகும்
  • 6 வாரத்தில் உடல் எடையை அடைகிறது.  இதன் தீவன மாற்று விகிதம் 2.2
    ஆகும்
  • 97% கோழிகள் 6 வாரம் வரை உயிருடன் இருக்கின்றன
  • பறவைகள் கவர்ச்சியான இறகுகளுடன் உள்ளன.  வெப்ப மண்டல
    பகுதிகளுக்கு ஏற்றதாகும்
  • வணிக ரீதியாக வளர்க்கப்படும் கிரிஷிப்ரோ ரகம் ராணிக்கெட் மற்றும் பிற
    தோற்று  நோய்களுக்கு எதிர்ப்பு திறன் கொண்டவை ஆகும்
  • நன்மைகள்    : கடினமான, சூழலுக்கு ஏற்று வாழக்கூடிய,
    அதிக உயிர்வாழ் திறன் கொண்டவையாக இருக்கின்றன.

மேற்கண்ட இன கோழிகளைப் பெற கீழ்க்கண்ட முகவரியை அணுகவும்.

Director

Project Directorate on Poultry

Rajendra Nagar, Hyderabad - 500030

Andhra Pradesh,
INDIA
.

Phone :- 91-40-24017000/24015651

Fax : - 91-40-24017002

E-mail: pdpoult@ap.nic.in


கர்நாடகா
கால்நடை மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக் கழகம், வெளியிட்டுள்ள
இரகங்கள்.

கிரிராஜா





பெங்களுரில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கோழி
ஆராய்ச்சித்துறை இதனை வெளியிட்டுள்ளது.





சுவர்ணதாரா

இவ்வினம் கிரிராஜா வகையைவிட ஆண்டுக்கு 15-20 முட்டைகள் அதிகமாக
இடுகின்றன.  இதனை கர்நாடகா கால்நடை மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகம்
2005ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளது.  சுவர்ணதாரா கோழிகள் அதிக முட்டை
உற்பத்தி செய்வதுடன், உள்ளுர் ரகங்களைவிட நன்றாக வளர்கிறது.  இது
கலப்பு பண்ணையத்திற்கும், வீட்டில் வளர்ப்பதற்கும் ஏற்றதாகும்.


  • கிரிராஜா இனத்தைவிட சிறிதாகவும், எடை குறைவாகவும் இருப்பதால்,
    காட்டுப் பூனைகள், நரிகளிடம் இருந்து எளிதில் தப்பி விடுகின்றன.
  • முட்டை, இறைச்சி ஆகிய இரண்டிற்காகவும் வளர்க்கலாம்.
  • பொரித்த 22-23 வாரத்தில் பருவமடைகிறது.
  • கோழி 3 கிலோ எடையையும், சேவல் 4 கிலோ எடையையும் அடைகின்றன.
  • கோழிகள், ஒரு வருடத்திற்கு 180-190 முட்டைகள் ஈடுகின்றன.

மேற்கண்ட இன கோழிகளைப்
பெற கீழ்க்கண்ட முகவரியை அணுகவும்


Prof and Head,

Department of Avian Production and Management,

Karnataka Veterinary Animal Fishery Sciences University,

Hebbal, Bangalore: 560024,

Phone: (080) 23414384 or 23411483 (ext)201.

பிற உள்நாட்டு
இனங்கள்





இனம்- இடம்

அங்களேஷ்வர்- குஜராத்

அசீல்- ஆந்திரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம்

பர்சா- குஜராத் மற்றும் மஹாராஷ்ட்ரா

சிட்டாகாங்- மேகாலயா மற்றும் திரிபுரா

டங்கி- ஆந்திரபிரதேசம்

தவோதிகிர்- அசாம்

காகஸ்- ஆந்திரபிரதேசம் மற்றும் கர்நாடகா

ஹர்ரிங்காடா கருப்பு- மேற்கு வங்காளம்

கதக்நாத்- மத்தியபிரதேசம்

காலஸ்தி- ஆந்திரபிரதேசம்

காஷ்மீர் பவிரோலா- ஜம்மு மற்றும் காஷ்மீர்

மிரி- அசாம்

நிக்கோபாரி- அந்தமான் மற்றும் நிக்கோபார்

பஞ்சாப் பிரெளன்- பஞ்சாப் மற்றும் அரியானா

தெள்ளிச்சேரி- கேரளா



தகவல் ஆதாரம் --இந்திய முன்னேற்ற நுழைவாயில்http://www.indg.in/

Thursday, August 28, 2008

கறிக்கோழி வளர்ப்பு



கோழிக்கறி வகைகளில் அதிகம் விரும்பப்படுவது கறிக்கோறி (ப்ராய்லர்) வகையாகும். பல தனியார் நிறுவனங்கள் விவசாயிகளுடன் இணைந்து ஒப்பந்த முறையில் கறிக்கோழி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். விற்பனையில் எந்தவித சிரமமும் இல்லை. மிருதுவான, மென்மையான சதையை உடைய 1.5-2.0 கிலோ எடையுள்ள 8 வார வயதிற்கு கீழ் உள்ள கோழிகளை ப்ராய்லர் என்கிறோம்.

சிறந்த பராமரிப்பு முறைகள்
கோழிக் கொட்டகையின் வெப்பநிலை: முதல் வாரத்தில் 950 சி இருக்க வேண்டும். பின்பு ஒவ்வொரு வாரமும் 50 சி வெப்பத்தை குறைக்க வேண்டும். 6-ஆவது வாரம் 700 சி வெப்பம் வரும் வரை குறைக்க வேண்டும்.
காற்றோட்ட வசதி : கோழிக் கழிவிலிருந்து வெளிப்படும் அமோனியாவை நீக்கி மூச்சுத்திணறல் வராமல் தடுக்க நல்ல காற்றோட்டத்தைப் பராமரிக்க வேண்டும்.
மின்விளக்கின் மூலம் வெப்பம் அளித்தல்: 200 சதுர அடி தரையளவிற்கு 60 வாட் விளக்குகள் போட வேண்டும்.
தரை இடஅளவு : ஒரு கோழிக்கு 1 சதுர அடி
மூக்கு வெட்டுதல்:1 நாள் வயதுடைய குஞ்சுகளுக்கு மூக்கை வெட்ட வேண்டும்.
கறிக்கோழி (ப்ராய்லர்) சுகாதாரப் பராமரிப்பு
· நோயற்ற குஞ்சுகளைக் கொண்டு தொடங்க வேண்டும்
· மேரக் நோயைத் தடுக்க குஞ்சு பொறிப்பகத்திலேயே தடுப்பூசி போட வேண்டும்.
· 4-5 நாட்களில் ஆர்.டி.வி.எப். 1 போட வேண்டும்.
· கழிச்சல் (காக்கிடியாசிஸ்) நோயினைத் தடுக்க தீவனத்துடன் மருந்துகளைக் கலந்து கொடுக்க வேண்டும்.
· பூஞ்சாண நச்சுகளிலிருந்து தீவனத்தைப் பாதுகாக்க வேண்டும்.
· தரையில் 3 இஞ்ச் ஆழத்திற்கு நிலக்கடலை கழிவு அல்லது நெல் உமி கொண்டு நிரப்ப வேண்டும்.
விற்பனை செய்தல்· 6-8 வாரங்கள் வயதுடைய கோழிகளை விற்பனை செய்ய வேண்டும்.
· கோழிகளைப் பிடிக்கும் போது, காயங்கள் ஏற்படாமல் இருக்க, தீவனத் தட்டுகளையும், தண்ணீர் தட்டுகளையும் அகற்ற வேண்டும்.
· திடீர் வானிலை மாற்றங்களிலிருந்து கோழிகளைக் காக்க வேண்டும்.

சுகுணா (கோயமுத்தூர்), வெங்கடேஸ்வரா (பூனா), பயனியர், ப்ரோமார்க் போன்ற தனியார் நிறுவனங்கள், ஒப்பந்த முறையில் விவசாயிகளுடன் இணைந்து கறிக்கோழி உற்பத்தி செய்கின்றன. மேலும்,
· சிறந்த இனங்கள் கிடைக்குமிடம்
· கோழிக் கொட்டகை அமைத்தல்
· தீவனம் அளித்தல்
· நல்ல வளமான கோழிகளை உருவாக்குதல்
போன்றவற்றில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அருகில் உள்ள கால்நடை பராமரிப்பகத்தையோ அல்லது வேளாண் அலுவலகத்தையோ அணுகவும்.

தகவல் ஆதாரம் --இந்திய முன்னேற்ற நுழைவாயில்http://www.indg.in/

Friday, June 13, 2008

இந்திய முன்னேற்ற நுழைவாயில்


இண்-டி-ஜி (இந்தியா டெவலப்மெண்ட் கேட்வே) என்பது கிராமப்புறம் மற்றும் சமூக வளர்சிக்கான குறிப்பான தேவைகளை இலக்காக வைத்துச் செயல்படும் நாடு தழுவிய அளவில் நடக்கும் ஒரு முயற்சி. இந்த கேட்வே இந்தியாவின் தேசிய வலையகம். இதன்மூலம் தகவல்கள் மற்றும் சேவைகள் பற்றி அறியலாம். இதுவரையில் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும் இந்திய கிராமப்புற சமூகங்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் ஏழைகளைச் சென்றடைவதுதான் இதன் நோக்கம்.
கிராமப்புறச் சமூகங்களுக்கு, குறிப்பாக ஒதுக்கப்பட்ட மக்கள் மற்றும் ஏழைகளுக்கு அவர்களுடைய உண்மையான, முக்கியமான தேவைகளுக்கான உற்பத்திப் பொருள்கள் மற்றும் சேவைகள் பற்றிய நம்பகமான தகவல்களை அவர்கள் மொழியிலேயே தருவதே கேட்வேயின் குறிக்கோள். அறிவுப் பகிர்வுக்காகத் தகவல் தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தி வளர்ச்சி காண இது வழிவகுக்கும்.
இந்த பன்மொழி வலைதளம் உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம் (சி. டாக) -்கின் ஐதராபாத் அலுவலகத்தால் செயலாக்கப்படுகிறது.
உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம் (சி. டாக்), இந்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் நுண்பொறி அமைச்சகத்தால் (முன்பு மின்னியல் துறை), 1988-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட ஒர் அறிவியல் சங்கமாகும். மின்னியல் மற்றும் மேம்பட்ட தகவல் நுண்பொறி சம்பந்தமான துறையில், உருவாக்கம், மேம்பாடு மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகமாக சி. டாக் செயல்பட்டு வருகிறது. தகவல் நுண்பொறி துறையில் இந்தியாவின் பெருமைகளில் ஒன்றான ‘பரம்’ அதிநவீன கணினிகள் சி. டாக்-ஆல் உருவாக்கப்பட்டவை. சி. டாக்கின் ஐதராபாத் அலுவலகம், மென்பொருள்-பாதுகாப்பு, மின்வழிக்கல்வி, பண்டமாற்று மேலாண்மை, இலவச மென்பொருள்கள் மற்றும் மென்பொருள் பொருந்திய கருவிகளின் பயன்பாடுகள் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.

Monday, March 3, 2008

கந்து வட்டியும் கடன் தள்ளுபடியும்




நமது நாட்டின் விவசாயிகளை கடன் சுமையிலிருந்து மீட்க, கூட்டுறவு வங்கிகளிலிருந்து அரசு வங்கிகள் வரை சிறு, நடுத்தர விவசாயிகள் வாங்கியுள்ள கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று நிதி நிலை அறிக்கையில் அறிவித்திருப்பது மன மகிழ்ந்து வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், அது தொடரும் தற்கொலைகளைத் தடுக்குமா என்பதுதான் இன்னமும் பதில் காண முடியாத கேள்வியாகவுள்ளது. இரண்டு ஹெக்டேர் (5 ஏக்கர்) வரை நிலம் வைத்துள்ள சிறு, நடுத்தர விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய ரூ.50,000 கோடியும், இதர விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய ரூ.10,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் 4 கோடி விவசாயிகள் பலனடைவார்கள் என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். இந்தக் கடன் தள்ளுபடி தங்களுக்குப் பயனளிக்கப் போவதில்லை என்று, விவசாயிகள் அதிகமாக தற்கொலைகள் செய்து கொள்ளும் மராட்டிய மாநிலம் விதர்பா பகுதி விவசாயிகள் கூறியுள்ளனர். கடன் சுமையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெரும்பான்மையோருக்கு 5 ஏக்கருக்கும் அதிகமாகத்தான் நிலம் உள்ளது என்றும், நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வரையறையால் தங்களுக்கு அந்த நிவாரணம் கிடைக்கப் போவதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.இது மிகவும் கவனிக்கத் தக்கதாகும். கடன் சுமையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குள்ள நிலங்களின் அளவை கணக்கில் கொள்வதற்கு பதிலாக, அவர்கள் கடன் சுமையிலிருந்து விடுபட இயலாத காரணியை அடிப்படையாகக் கொண்டு - உதாரணத்திற்கு, விதர்பா பகுதியில் பாதிப்பிற்குள்ளான விவசாயிகள் பருத்தி பயிர் செய்து கடன் பட்டவர்கள் - கடன் நிவாரணம் அளிப்பது சரியாக இருக்கும்.

மராட்டியத்திலிருந்து ஆந்திரம் வரை கடன் சுமையிலிருந்து விடுபட வழியில்லாமல் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட விவசாயிகளில் பெரும்பான்மையோர் கந்து வட்டிக் கடன் பட்டவர்களாவர். மாதத்திற்கு 3, 5, 7 விழுக்காடு என்று சிறிய தொகையைப் பெற்று கடன் பட்டு, அதைக்கூட திருப்பிக் கட்ட முடியாமல் தூக்கில் தொங்கியவர்களே அதிகம்.விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு செத்த கணக்கை தேச குற்றப் பதிப்பு வாரியம் (National Crime Records Bureau - NCRB) வெளியிட்டதைத் தொடர்ந்து எழுதிய கட்டுரையில் (‌சிற‌ப்பு தூ‌க்கு ம‌ண்டல‌ம்) தமிழ்.வெப்துனியா.கா‌ம் குறிப்பிட்டிருந்தபடி, வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும், பொதுத் துறை வங்கிகளிலும் பெற்ற கடன்களை த‌ள்ளுபடி செ‌ய்வது மட்டுமின்றி, கந்து வட்டிக்குப் பெற்ற கடன்களை மாநில அரசுகள் அவசர சட்டம் இயற்றி ரத்து செய்ய வேண்டும் என்று எழுதியிருந்தோம்.ஏனெனில் கந்து வட்டிக்குப் பெற்ற கடன்களை ரத்து செய்யாமல், தங்களை மரண வேதனையில் அழுத்திக் கொண்டிருக்கும் கடன் சுமையிலிருந்து விவசாயிகளை மீட்க முடியாது.எனவே, மராட்டியம், ஆந்திரம், கர்நாடகம், சட்டிஷ்கர், மத்திய பிரதேசம் மாநில அரசுகள் அனைத்தும் கந்து வட்டி அனைத்தையும் ரத்து செய்யும் அவசர சட்டம் பிறப்பிக்குமாறு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும்.இதைச் செய்யவில்லையெனில், தற்கொலைகள் தொடர்கதையாவதை முழுமையாகத் தடுக்க இயலாது.


Wednesday, February 27, 2008

முதல் உலக வேளாண் வர்த்தக கருத்தரங்கு 2008

முதல் உலக வேளாண் வர்த்தக கருத்தரங்கு 2008 - இந்தியாவில்
மத்திய வேளான், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு. ஷரத் பவார் மற்றும் ஐ.நா. சபையின் உணவு மற்றும் விவசாயக் கழகத்தின் இயக்குநர், டாக்டர். ஜாக்குவஸ் டையூஃப் ஆகியோர் இணைந்து, இந்தியா, இந்த உலக வேளாண் வர்த்தக கருத்தரங்கை-2008-ல் நடத்தும் என்று அறிவித்துள்ளனர்.இந்திய அரசு, ஐ.நா. சபையின் உணவு மற்றும் விவசாயக் கழகம் மற்றும் GAIF ஆகியவை இணைந்து இந்த கருத்தரங்கை நடத்துகிறது.இந்த கருத்தரங்கில், வறுமையை ஒழிக்க வேளாண் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக பேச்சு வார்த்தை நடத்தப்படும். இந்த கருத்தரங்கானது, வளர்ந்து வரும் நாட்டிலுள்ள சிறு விவசாயிகளுக்கான முன்னேற்றத்தை தரக்கூடிய வழி முறைகளை வகுக்கும். வேளாண் அமைச்சகம், தொழில் துறை அமைச்சகம் மற்றும் வேளாண் தொழில் துறை வல்லுனர்கள், தனியார் உணவு உற்பத்தி தொழில் மையங்களிலிருந்து சுமார் 500 அனுபவம் மிகுந்த நபர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்வர். மேலும் விவரங்களுக்கு, www.gaif08.org
தகவல் : http://www.pib.nic.in/release/release.asp?relid=29721

தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டம்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டம்
விவசாய வேலைகளற்ற காலங்களில் ஊரக மக்கள் இடம் பெயர்தலை தடுத்து அவர்களுக்கு வருடத்திற்கு 100 நாட்களுக்கு, அதிக நுணுக்கமில்லாத திறமை தேவைப்படாத வேலைவாய்ப்பு அளிக்க இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் குறைந்த பட்ச கூலியில் நீர் சேமிப்பு, நில மேம்பாடு, வறட்சியை எதிர்கொள்வற்கான முயற்சிகள் போன்ற திட்டங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.
இத்திட்டத்தை பிரதமர் டாக்டர். மன்மோகன்சிங் பிப்ரவரி 2, 2006 ஆம் ஆண்டு துவங்கி வைத்தார்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
· வறுமைகோட்டிற்கு கீழ் வாழ்வோருக்கு மட்டுமல்லாமல் கிராமங்களில் வசிக்கும் அனைவருக்கும் நுணுக்கமில்லா வேலைவாய்ப்பு அளிப்பதற்கு, அனைவரையும் பதிவு செய்தல் வேண்டும்.
· விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வேலைவாய்ப்பு அட்டை வழங்கப்பட வேண்டும்.
· வேலை அட்டை வைத்திருப்போருக்கு வேலை தேவைப்படும் எனில் அவர்களது தேவையை ஏற்று வேலைவாய்ப்பை 15 நாட்களுக்குள் அளிக்க வேண்டும்.
· நீர் மற்றும் நில வளம் காத்தல், காடுவளர்ப்பு, நீர் சேமிப்பு, நில மேம்பாடு போன்ற வேலைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
· இதில் 50% வேலைவாய்ப்பை கிராம ஊராட்சிகளே அமல்படுத்த வேண்டும்.
· கிராமத் திட்டங்களை கிராமசபா பரிந்துரை செய்தபின் ஜில்லா பஞ்சாயத்து அதனை அங்கீகரிக்க வேண்டும்.
· தரகர்களையோ அல்லது இயந்திரங்களையோ பயன்படுத்தக்கூடாது.
· வேலையாட்கள் அதிகம் தேவைப்படுகின்ற பணிகளை தேர்ந்தெடுத்து, 60% கூலியில் வேலையை மேற்கொள்ள வேண்டும்.
· 15 நாட்களுக்குள் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். மாநில அரசு வேளாண் பணிகளுக்கு பரிந்துரை செய்துள்ள குறைந்த பட்ச கூலியை கடைபிடிக்க வேண்டும்.
· தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், கேரளா போன்ற மாநிலங்கள் பணப்பட்டுவாடா செய்வதற்கு வங்கிகளையும், தபால் நிலையங்களையும் பயன்படுத்துகின்றன.
மேலும் விபரங்களுக்கு http://www.nrega.nic.in/ என்ற இணையதளத்தை அணுகவும்।

இச்சட்டத்தின்படி யாரெல்லாம் வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்?
கிராமப்புறங்களில் வசிக்கும் வயது வந்த குடும்பத்தினர் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இச்சட்டத்தின் கீழ், ஏற்கனவே வேலையில் இருந்தாலும், அல்லது தற்பொழுது வேலை செய்துகொண்டிருந்தாலும், திறன் தேவைப்படாத வேலை கேட்க உரிமை உண்டு.
பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் இச்சட்டத்தின் கீழ் 33 சதவீத வேலையை பெண்களுக்கு கொடுக்க வேண்டும்.
தனியொருவரின் விண்ணப்பம் வேலைக்கு ஏற்றுக்கொள்ளப்படுமா?
ஆம். வேலை வேண்டுவோர் குடும்பவாரியாக பதிவு செய்யப்படுவர். இருப்பினும், ஒரு குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் 100 நாட்கள் வேலை வாய்ப்பிற்கு தங்களை பதிவு செய்யலாம்.
எவ்வாறு ஒருவர் விண்ணப்பிக்கமுடியும்?
வேலைக்கு தங்களை ஏற்கனவே பதிவு செய்து வேலை அட்டை வைத்திருப்போர், வேலை வாய்ப்பு பெற, வேலை வேண்டி ஒரு தனி கடிதம் வரைந்து கிராம பஞ்சாயத்திற்கோ அல்லது அவ்வொன்றியத்தின் திட்ட அலுவலருக்கோ அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேதியையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு வருடத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருவர் வேலைவாய்ப்பு பெறமுடியும்?
ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு வருடத்தில் 100 நாட்களுக்கு வேலை பெறலாம். இந்த 100 நாட்கள் வேலையை ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும். வேலைக்காலம் தொடர்ச்சியாக 14 நாட்களாவது இருக்கவேண்டும். ஆனால் ஒரு வாரத்திற்கு 6 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
எப்பொழுது ஒருவருக்கு வேலை கிடைக்கும்?
விண்ணப்பம் கொடுத்த 15 நாட்களுக்குள்ளோ அல்லது வேலை கேட்ட முதல் நாளில் இருந்தோ வேலை கொடுக்கப்படும்.
வேலையை யார் வழங்குவார்கள்?
கிராம பஞ்சாயத்து அல்லது திட்ட அலுவலர் இருவரில் எவரிடம் வேலை வேண்டப்பட்டதோ அவர் வாயிலாக வேலை வழங்கப்படும்.
ஒருவருக்கு வேலை அளிக்கப்படும் என்பதை எவ்வாறு அவர்கள் அறியமுடியும்?
கிராமப் பஞ்சாயத்தோ அல்லது திட்ட அலுவலரோ, விண்ணப்பித்தவர்களுக்கு, எப்பொழுது, எங்கு வேலை அளிக்கப்படும் என்ற செய்தியை கடிதம் மூலம் அனுப்பவேண்டும். கிராம பஞ்சாயத்து மற்றும் திட்ட அலுவலர் அலுவலகங்களில் உள்ள செய்தி பலகையில் வேலை நடைபெறவிருக்கும் இடம், தேதி மற்றும் வேலைவாய்ப்பு பெறவிருப்போரின் பெயர்கள் போன்ற தகவல்கள் ஒட்டப்படும்.
வேலைக்கான கடிதம் கிடைத்தவுடன் விண்ணப்பித்தோர் என்ன செய்யவேண்டும்?
வேலை அட்டையுடன், வேலை நியமனம் செய்யப்பட்ட இடத்திற்கு, வேலை நடக்கவிருக்கும் நாளன்று செல்ல வேண்டும்.
ஒருவர் வேலை அளிக்கப்பட்ட தேதியில் வேலைக்குச் செல்லாவிட்டால் என்ன நடக்கும்?
கிராம பஞ்சாயத்து மற்று திட்ட அலுவலர் குறிப்பிட்ட 15 நாட்களுக்குள் அவர்கள் வேலைக்கு செல்லாவிட்டால், வேலையில்லாதோருக்கு அளிக்கப்படும் சலுகைகளில் இருந்து விலக்கப்படுவர்.
அவர்கள் மறுமுறை வேலைக்கு விண்ணப்பிக்க முடியுமா?
ஆம். விண்ணப்பிக்கலாம்
ஒருவருக்கு என்ன கூலி கிடைக்கும்?
மாநில அரசு வேளாண் தொழிலாளர்களுக்கு நியமனம் செய்துள்ள குறைந்த பட்ச கூலி அளிக்கப்படும்.
எவ்வாறு கூலி வழங்கப்படும்? தினக்கூலியா அல்லது வேலைப்பளுவை பொருத்தா?
இருவழிகளிலும் அளிக்கப்படும். வேலையின் அளவை மதிப்பிட்டு கூலி கொடுக்கப்பட்டால், 7 மணி நேரம் வேலை செய்வோருக்கு குறைந்த பட்ச கூலி கொடுக்க வேண்டும்.
எப்பொழுது கூலி வழங்கப்படும்?
வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது வேலை செய்த 14 நாட்களுக்குள்ளோ வழங்கப்பட வேண்டும். கூலிப்பணத்தில் ஒரு பகுதியை நாள் கூலியாகவும் வழங்கலாம்.
என்னென்ன வசதிகளை வேலையாட்களுக்கு அளிக்க வேண்டும்?
பாதுகாப்பான குடிநீர், குழந்தைகளுக்கு நிழல், ஓய்வெடுப்பதற்கு இடம், முதலுதவி பெட்டி போன்ற வசதிகள் செய்துதரப்படவேண்டும். வேலை செய்யும்போது ஏற்படும் சிறு காயங்களுக்கான மருந்துகளையும், ஏனைய சுகாதாரத்திற்கான அவசர சிகிச்சைக்கான மருந்துகளையும் முதலுதவிப்பெட்டியில் வைத்திருக்க வேண்டும்.
வேலை எங்கு அளிக்கப்படும்?
வீட்டிலிருந்து 5 கிலோ மீட்டருக்குள் வேலை நடைபெறும். 5 கிலோ மீட்டருக்கு மேல் தூரம் இருந்தால் அவர்களுக்கு, போக்குவரத்திற்காக 10 சதவீதம் அதிகமாக பணம் வழங்கப்படும். மேலும், வயதானவர்களுக்கும், பெண்களுக்கும் கிராமத்திற்கு அருகிலேயே வேலை செய்வதற்கு முன்னுரிமை அளித்து வேலைகொடுக்கப்படும்.
வேலையாட்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் என்ன?
விபத்து ஏற்பட்டால்
வேலை செய்யும் போது ஏதாவது விபத்து நேர்ந்தால், அவர்களுக்கு மாநில அரசின் இலவச சிகிச்சை கிடைக்கும்.
காயம் அடைந்தவர் மருத்துவமனையில் இருந்தால்
காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தால், அவர்களுக்கு மருந்துகள், சிகிச்சை, தங்கும் வசதி போன்றவை இலவசமாக கொடுக்கப்படும். மேலும் 50 சதவீதம் கூலிக்கு குறையால் பணம் கொடுக்கப்படும். வேலை செய்யும் இடத்தில் விபத்தின் காரணமாக இறப்போ அல்லது நிரந்தர ஊனமோ ஏற்பட்டால் இறந்தவரின் வாரிசுக்கோ அல்லது ஊனம் ஏற்பட்டவருக்கோ, மத்திய அரசு குறிப்பிட்டபடி ரூ. 25,000 தொகை வழங்கப்படும்.
தகுதி பெற்றவர்களுக்கு வேலை அளிக்கப்படாவிட்டால் என்ன நடக்கும்?
வேலை வேண்டி விண்ணப்பித்த, வேலைக்கு தகுதியான ஒருவருக்கு 15 நாட்களுக்குள் வேலை கிடைக்காவிட்டால், அவருக்கு வேலைவாய்ப்பு இல்லாதோருக்கான சலுகைகள் வழங்கப்படவேண்டும்.
சலுகைகளின் வீதம்
ஒரு குடும்பத்தாருக்கு கொடுக்கப்பட்ட வேலைநாட்களில் முதல் 30 நாட்களுக்கு 25 சதவீதம் கூலியும், அதற்கு மேல் 50 சதவீதம் கூலியும் கொடுக்க வேண்டும்.
எந்த வகையான வேலைகளை கொடுக்க வேண்டும்?
நீண்டநாள் தாங்கும் நீடித்த சொத்துக்கள் ஏற்படுத்துதல்
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், ஊரக ஏழை மக்களுக்காக நீடித்த நிலையான சொத்துக்களை உருவாக்கி அவர்களின் வாழ்க்கையை வளமாக்குவதாகும்.
தரகர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் வேலைகளுக்கு அனுமதி இல்லை
இத்திட்டத்தின் கீழ் செய்ய வேண்டிய வேலைகள் ஒன்றன்பின் ஒன்றாக
நீர்வள பாதுகாப்பு மற்று நீர் சேமிப்பு
வறட்சி எதிர்ப்பு திறன் ஏற்படுத்துதல், காடு வளர்ப்பு, மரம் நடுதல்
நீர்பாசன வாய்க்கால், நுண்பாசனம், சிறுபாசனம் போன்ற வேலைகள்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினைச் சேர்ந்த மக்களுக்கும், இந்திய அரசின் இந்திரா-அவாஸ் யோஜனா திட்டத்தின் சலுகை பெறுவோருக்கும், நீர்ப்பாசன வசதி அளித்தல்
ஏரிகளை தூர்எடுத்தல் போன்ற ஏனைய பழங்கால நீர் நிலைகளை புதுப்பிக்கும் வேலைகள்
நில மேம்பாடு
நீர் தேங்கும் பகுதிகளில் வடிகால் வசதி அமைத்து வெள்ளத்தில் இருந்து பாதுகாத்தல்
அனைத்து தட்பவெப்ப நிலைகளிலும் கிராமங்களை இணைத்தல். சாலைகள் அமைத்து, தேவைப்படும் இடங்களில் சிறுபாலங்கள் அமைத்தல் மற்றும், கிராமங்களின் உள்பகுதிகளிலும் தேவையான இடங்களில் சிறுபாலங்கள் அமைத்தல்
மத்திய அரசு மாநில அரசுடன் கலந்து ஆலோசித்த மற்ற பணிகளும் இதனுள் அடங்கும்.

திட்டத்தில் பணியாற்றுவோரின் சேவைகள் எவ்வாறு கண்காணிக்கப்படும்?
உள் மற்றும் வெளி மதிப்பீட்டாளர்களைக் கொண்டு இத்திட்டத்தின் பொறுப்பாளர்கள் மேற்கொள்ளும் பணிகள், தொடர்ச்சியாகவும், இடையிலும் மதிப்பீடு செய்யப்படும். கிராம சபாக்கள் மூலம் பணிகள் அனைத்தும் கணக்கீடு செய்யப்படும். கிராம அளவில் காவல் கண்காணிப்பாளர்கள் அமைக்கப்படுவர். இத்திட்டத்தில் ஏதேனும் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் இதில் சம்பந்தப்பட்டோருக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘குறை தீர்க்கும் மையங்கள்’ உருவாக்கப்படும்

Saturday, January 19, 2008

வேளா‌ண் கடனு‌க்கு ‌விரை‌வி‌ல் கூடுத‌ல் ‌நி‌தி ஒது‌க்‌கீடு

வேளா‌ண் துறை‌க்கு அ‌திக கட‌ன் வழ‌ங்க ஏ‌ற்ற வகை‌யி‌ல் கூடுதல் நிதி ‌விரை‌வி‌ல் ஒது‌க்க‌ப்பட உ‌ள்ளதாக ம‌த்‌திய வேளா‌ண் துறை அமை‌ச்ச‌ர் சர‌த் பவா‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்। இது தொட‌ர்பாக ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங், ‌நி‌தியமை‌ச்ச‌ர், பாரத ‌ரிச‌ர்‌வ் வ‌ங்‌கி ஆளுன‌ர், நபா‌ர்டு வ‌ங்‌கி‌த் தலைவ‌ர் ஆ‌கியோரை‌த் தொட‌ர்‌ந்து ச‌ந்‌தி‌த்து தமது தலைமை‌யிலான குழு வ‌லியறு‌த்‌தி உ‌ள்ளதாகவு‌ம் கூ‌‌றியு‌ள்ளா‌ர். இ‌ந்த ‌விவாத‌ங்க‌ளி‌ன் மூல‌ம் ‌விவசா‌யிகளு‌க்கு உதவ க‌ணிசமான நிதி ஒது‌க்க‌ப்பட வே‌ண்டு‌ம் எ‌ன்ற பு‌ரித‌ல் ச‌ம்ம‌ந்த‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், இ‌ன்னு‌ம் ஓ‌ரிரு வார‌ங்க‌ளி‌ல் இது தொட‌ர்பான அ‌‌றி‌வி‌ப்பு வெ‌ளிவரு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.வேளா‌ண் பொரு‌ட்க‌ளை ச‌ந்தை‌ப்படு‌த்து‌ம் குழு நெ‌றிமுறைக‌ள் தொட‌ர்பாக இ‌ந்‌திய தொ‌ழி‌ல் வ‌ர்‌த்தக கூ‌ட்டமை‌ப்பு ஏ‌ற்பாடு செ‌‌ய்‌திரு‌ந்த கரு‌த்தர‌ங்‌கி‌ல் கல‌ந்து கொ‌ண்டு பே‌சிய ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் சர‌த் பவா‌ர்,அரசு வேளா‌ண் கடனை முத‌ல் மூ‌ன்று ஆ‌ண்டுக‌ளி‌ல் ரூ.80,000 கோடி‌யி‌லிரு‌ந்து ஒரு ல‌ட்ச‌த்து 60,000 கோடியாக அ‌திக‌ரி‌க்க இல‌க்கு ‌நி‌‌ர்ண‌யி‌த்ததாக கு‌றி‌ப்‌பி‌ட்டா‌‌ர். கட‌ந்த ஆ‌ண்டு வேளா‌ண் கட‌ன் 2 ல‌ட்ச‌த்து 10 ஆ‌யிர‌ம் கோடியை எ‌ட்டியு‌ள்ளதையு‌ம் அவ‌ர் சு‌ட்டி‌க் கா‌ட்டியு‌ள்ளா‌ர். கட‌ன் தேவை‌ப்படு‌ம் ‌விவசா‌யிகளு‌க்கு இ‌ன்னு‌ம் ந‌ம்மா‌ல் கட‌ன் வழ‌ங்க இயலாத ‌நிலை‌யி‌ல், கட‌ன் பெற முடியாத ‌விவசா‌யிக‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திக‌ரி‌த்‌திரு‌க்கு‌ம் ‌நிலை ஒரு வேளா‌ண் அமை‌ச்சராக ஏ‌ற்று‌க் கொ‌ள்ள முடிய‌வி‌ல்லை எ‌ன்று‌ம், இது தம‌க்கு வரு‌த்த‌த்தை அ‌ளி‌ப்பதாகவு‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். ‌விவசா‌யிகளு‌க்கு ‌நி‌தி ‌நிறுவன‌ங்க‌ள் ‌விவசாய கட‌ன் வழ‌ங்‌கி வரு‌ம் ‌நிலை‌யிலு‌ம், க‌ணிசமான ‌விவசாய‌த் துறை சா‌ர்‌ந்த பல‌ர் இ‌ன்னு‌ம் இ‌ந்த பயனை பெற இயலாத ‌நிலை‌யிலேயே ‌நீடி‌த்து வருவதாகவு‌ம் பவா‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். இ‌ந்‌திய ‌விவசா‌யிக‌ள் எ‌தி‌ர்கொ‌ண்டு வரு‌ம் ‌மிக‌ப் பெ‌ரிய சுமை கு‌றி‌த்து ‌தீ‌விரமாக யோ‌சி‌க்க‌க் கூடிய ஒரு கால‌ச்சூழ‌ல் த‌ற்போது வ‌ந்து‌ள்ளதாகவு‌ம், ‌மிக‌ப் பெ‌‌ரிய அள‌வி‌ல் ‌விவசா‌யிக‌ள் ‌நி‌தி ‌நிறுவன‌ங்க‌ள் வழ‌ங்கு‌ம் வேளா‌ண் கட‌ன்களை‌ப் பெ‌ற்று பயனடைய நடவடி‌க்கை மே‌ற்கொ‌ள்ள‌ப்பட வே‌ண்டு‌ம் எனவு‌ம் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர். வேளா‌ண் கட‌ன் ‌கிடை‌க்காத சூ‌ழ்‌நிலை‌யி‌ல் ‌விவசா‌யிக‌ள், த‌ங்க‌ள் தொ‌ழிலை‌த் தொட‌ங்க முத‌ல் போட முடியாத ‌நிலை‌யி‌ல் உ‌ள்ளன‌ர். இதனா‌ல் வேளா‌ண் உ‌ற்ப‌த்‌தி, ‌திற‌ன் கடுமையாக பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். இதனா‌ல் ஏ‌‌ற்ப‌ட்டு‌ள்ள ப‌ற்றா‌க்குறையை எ‌தி‌ர்கொ‌ள்ள அரசு ப‌ல்வேறு வேளா‌ண் பொரு‌ட்களை இற‌க்கும‌தி செ‌ய்ய வே‌ண்டிய ‌நிலை‌க்கு ஆளானதாகவு‌ம் பவா‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். மேலு‌ம் இ‌ந்த ‌நிலை ‌சீரடைவத‌ற்கு வே‌ண்டிய அனை‌த்து நடவடி‌க்கைகளையு‌ம் அரசு மே‌ற்கொ‌ள்ளு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் அ‌ப்போது உறு‌திய‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

நன்றி : வெப்துனியா

Saturday, January 12, 2008

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்



பொன் விளையும் பூமிக்கும்
பொன்னிறமாய் புலர்கின்ற பொழுதுக்கும்
நன்றி சொல்லும் நன்னாளாம்
நம் தமிழர் தைத் திருநாள்

உயிர்களிடம் அன்பு சொல்லி
உழைப்புக்கு நன்றி சொல்லி
பயிர் வளர்க்கும் உயர்குடியே
பழையன கழித்து புதியன புகுத்திடு

இன்நாளில் எரித்துவிடு
உன் உள்ளத்துக் குப்பைகளை
என்நாளும் எரிக்காமல் புதைத்துவிடு
சூழலுக்கு கேடு தரும் மாசுகளை

இல்லத்தை தூய்மை செய்து வெள்ளையடி
நல்லவைகள் செய்து செய்து
நம் மக்கள் நெஞ்சங்களே
நல்லபடி கொள்ளையடி

பச்சரிசி பொங்கலிட்டு பாசமுடன் அதை
பல்லுயிர்க்ககும் படையலிட்டு
பொங்கலோ! பொங்கல் ! என்று
மங்களமாய் மகிழ்ச்சி பொங்க முழக்கமிடு

மண்ணுக்கும் மழைக்கும்
மனதார நன்றி சொல்லு
மானுடம் முழுமைக்கும்
மகிழ்ச்சியோடு வாழ்த்துச் சொல்லு

Friday, January 4, 2008

விவசாயிகள் மேம்பாட்டிற்கு உதவும் வீடியோ கான்பரன்சிங்

விவசாயிகள் மேம்பாட்டிற்கு உதவும் வீடியோ கான்பரன்சிங்

நாடு முழுவதும் விவசாயிகள் தரமான விதை, உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை தேர்வு செய்வதற்கு உரிய ஆலோசனைகளைப் பெறுவதற்கு வீடியோ கான்பரன்சிங் வசதியை பயன்படுத்தத் துவங்கியிருப்பது, தகவல் தொழில்நுட்பப் புரட்சியை பறைசாற்றுவதாக உள்ளது.

வேளாண் சந்தை நிலவரம், சந்தையில் வேளாண் பொருட்கள் பற்றிய தகவல்களை விவசாயிகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் விளக்கம் கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.

கிராம விவசாயக் குழுக்கள் பலவற்றை ஒருங்கிணைத்து செயல்பட இந்த வீடியோ கான்பரன்சிங் பெரிய அளவில் பயன்படுவதாக ராஜஸ்தானைச் சேர்ந்த பல்கலைக்கழக துணை வேந்தர் மேத்தா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் வேளாண் குழுக்களை ஒருங்கிணைக்க இருவழி வீடியோ கான்பரன்சிங் வசதியை அம்மாநில அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது.

இது விவசாயிகளின் வாழ்க்கை மேம்பட பெரிதும் உதவுவதாக மகாரானா பிரதாப் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் எஸ்.எல். மேத்தா தெரிவித்துள்ளார்.

வேளாண் கல்வி முடித்த பயிற்சியாளர்கள், விவசாயிகள், வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, மீன் வளத்துறை மற்றும் வேளாண் எந்திரவியல் சார்ந்த அலுவலர்களின் தகுதியை மேம்படுத்த வீடியோ கான்பரன்சிங் வசதி பயன்படுவதாகவும் அவர் கூறினார்.

இதன் மூலம் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தேவையான கருத்துரைகள் மற்றும் விளக்கங்கள் அளிக்கப்படுகிறது.

கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களுடைய பிரச்சினைகளை கிராம விவசாய குழுத் தலைவரிடம் தெரிவிக்கின்றனர். இப்பிரச்சினைகளுக்கு அக்கிராமங்களில் தீர்வு கிடைக்காத நிலையில் அவர்கள், அருகில் உள்ள உதய்பூருக்கு வர வேண்டிய நிலை முன்பு இருந்தது. தற்போது வீடியோ கான்பரன்சிங் முறையில் அவர்களுடைய பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட வேளாண் துறை வல்லுநர்கள் மூலம் வீடியோ கான்பரன்சிங்கிலேயே தீர்க்கப்பட்டு வருகிறது.
இந்த வசதியைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் கிராமப்பகுதிகளில் வாழும் மாணவர்களின் வாழ்க்கைத் திறனை உயர்த்தும் வகையில் தையல் உள்ளிட்ட தொழில்களை பயிற்றுவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வீடியோ கான்பரன்சிங் உதவியுடன் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதில் ஒருங்கிணைந்த கிராம விவசாயிகள் குழு மையம் உதவி செய்வதாகவும், விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை வாங்க விரும்புபவர்கள் இந்த மையத்தில் இருந்து சம்பந்தப்பட்ட விவசாயியுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில் வியாபாரம் மேற்கொள்ளவும் எளிதாகிறது.

இந்த முறையை மேலும் பயனுள்ளதாக மாற்ற, விவசாயிகளால் பயன்படுத்தப்படும் மொழியின் திறனை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாகவே தமிழகத்தில் எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்துடன் 2004-ம் ஆண்டு தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இதுபோன்ற வீடியோ கான்பரன்சிங் முறைக்கு ஏற்பாடு செய்தது. இதில் கடலை விவசாயிகள் பெருமளவில் பங்கேற்று அவர்களுடைய பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்களுடன் கலந்துரையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இரண்டாவது வீடியோ கான்பரன்சிங் கடந்த ஜுன் 2005-ம் ஆண்டு இதே பகுதியில் உள்ள 30 கிராமங்களைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்களுக்கு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் தங்கள் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் வாய்ப்புகளை நிபுணர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட வீடியோ கான்பரன்சிங் முறைக்கு வரவேற்பு நல்லமுறையில் இருந்ததையடுத்து, நாடு முழுவதும் 7 மண்டலங்களில் இந்த வீடியோ கான்பரன்சிங் வசதியை விரிவுபடுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் இணக்கம் தெரிவித்துள்ளது

வீடியோ கான்பரன்சிங் வசதி முறையில் விவசாயிகள் நேரடியாக நிபுணர்களுடன் தொடர்பு கொள்ளும்போது ஏற்படும் மொழிப் பிரச்சினையைத் தொடர்ந்து இருவரிடையே மொழி பெயர்ப்பாளர்களை நியமனம் செய்து விவசாயிகள் கூறும் பிரச்சினைகளை நிபுணர்கள் உள்ளபடியே தெரிந்து கொள்ளவும், அப்பிரச்சினைகளுக்கு நிபுணர்கள் கூறும் விளக்கங்களை விவசாயிகள் தெளிவாகப் புரிந்து கொள்ளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேளாண் நிபுணரான ஜெரால்டு சில்வர்ஸ்டர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக விவசாயிகளிடம் இருந்து அவர்களுடைய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கேட்டு ஒருங்கிணைத்துக் கொள்கிறோம். அதன்பின்னர் அதற்குரிய பதில்களை நிபுணர்களிடம் பெற்று வழங்கி வருகிறோம் என்று தெரிவித்த அவர், ஏறக்குறைய 80 சதவீத கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், வேளாண் துறை சார்ந்த விவசாயிகளின் கேள்விகளுக்கான பதில்களை ஏற்கனவே எம்.பி.3 முறையில் பதிவு செய்து வைத்திருப்பதாகவும், விவசாயிகள் கேள்வி கேட்கும்போது அதற்குரிய பதிலை ஒளிபரப்புவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த கிராம விவசாய மையங்கள் நீண்ட காலம் நீடித்திருக்க விவசாயிகள் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஹைதராபாத்தில் உள்ள தேசிய வேளாண்மை விரிவாக்க மையம், வி சாட், வீடியோ கான்பரன்சிங் வசதி கொண்ட வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த வாகனம் ஒவ்வொரு கிராமப் பகுதிக்கும் சென்று விவசாயிகளின் தேவைகளை அறிந்து அதற்கு தீர்வு காணும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சில்வஸ்டர் தெரிவித்துள்ளார்.

என்றாலும் வீடியோ கான்பரன்சிங் திட்டத்தை செயல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல் நீடிப்பதாகவும், உரிய நிதி ஒதுக்கப்படாததே அதற்குக் காரணம் என்றும் விவசாய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொழில்துறையில் மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த வீடியோ கான்பரன்சிங் வசதி, தற்போது விவசாயிகளுக்கு பயனளிக்கக் கூடிய வகையிலும் விரிவடைந்துள்ளது.

நாட்டின் முதுகெலும்பாக உள்ள வேளாண்மைத் துறையின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கினால் மட்டும் போதாது. அந்த நிதி உரிய இடங்களுக்கு உரிய வகையில் போய்ச் சேருகிறதா என்பதை அரசு கண்காணிப்பதுடன், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் ஈடுபட்டுள்ள வேளாண்மைத் துறையில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி ஒரு ஏக்கரில் உற்பத்தி செய்யப்படும் நெல்மணிகளின் அளவை உயர்த்துவதன் மூலமே தொழில்துறை மற்றும் சேவைத் துறையில் நமது இலக்கை எட்ட இயலும்.

வேளாண் துறையில் ஒரு பங்கு உற்பத்தி கூடுதல் என்பது தொழில்துறையிலும், சேவைத் துறையிலும் 2,3 மடங்கு கூடுதல் வர்த்தகத் திறனை அதிகரிக்கும். எனவே அரசு சிறப்புக் கவனத்தை வேளாண் துறைக்கும் தர வேண்டும் என்பதே பெரும்பான்மையான விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நன்றி : msn தமிழ்