This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday, October 11, 2008

வேம்பு பூச்சி மருந்து

பல்கலை தயாரிப்பில் வேம்பு பூச்சி மருந்து!



புது டெல்லி: இந்தியாவின் முன்னணி பல்கலைக் கழகங்களில் ஒன்றான தபார் பல்கலைக் கழகம் (Thapar University) வர்த்தக ரீதியாக வேம்பு பூச்சி மருந்து தயாரிக்க போவதாக அறிவித்துள்ளது.


இந்த பல்கலைக் கழகத்தில் உள்ள தொழிலகத்திலேயே, வேம்பு பூச்சி மருந்து தயாரிக்கப்படும்.



இந்த பல்கலைக் கழகமும், பஞ்சாப் மாநில விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப குழுவும் இணைந்து வேம்பு பூச்சி மருந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.



இங்கு முதலில் மணிக்கு 50 கிலோ வேம்பு பூச்சி மருந்து தயாரிக்கும் இயந்திரங்கள் நிறுவப்படும். இதன் மூலம் வருடத்திற்கு நான்கு டன் வேம்பு பூச்சி மருந்து தயாரிக்கப்படும்.


இதற்கு தேவையான வேப்ப இலை, வேப்பங் கொட்டை ஆகியவைகளுக்கா வேப்ப மரம் வளர்க்கப்படும். இந்த வேப்ப மரங்கள் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப தொழில் முனைவோர் பூங்காவில் வளர்க்கப்படும். இதிலிருந்து பூச்சி மருந்து தயாரிக்க தேவையான வேப்பங் கொட்டை பெறப்படும்.

இது குறித்து தபார் பல்கலைக் கழகத்தின் இயக்குநர் டாக்டர் அரிஜித் முகர்ஜி கூறுகையில், எங்களுக்கு இயற்கை பூச்சி மருந்துகளின் தேவை அதிக அளவு இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதை தயாரிக்க சிறிய அளவிலான தொழிற்சாலைகளுக்கு சிறந்த வாய்ப்பு உள்ளது.


ரசாயண உரம், பூச்சி மருந்துகள் பயன்படுத்தாமல் செய்யும் இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. இதில் பயன்படுத்தப்படும் இயற்கை உரம், பூச்சி மருந்துகள் சுற்றுச் சூழலுக்கு ஏற்றது. எவ்வித தீங்கும் இல்லாதது.

இவ்வகை பூச்சி மருந்துகள் பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது. இவை சுற்றுச் சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. நிலத்தடி நீர், மண் வளத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்று டாக்டர் அரிஜித் முகர்ஜி தெரிவித்தார்.


இதன் எதிர்கால திட்டம் பற்றி டாக்டர் அரிஜித் முக்ரஜி கூறுகையில், இந்த பூச்சி மருந்து தயாரிப்பதன் மூலம், இதை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் பயன்படுத்த ஊக்குவிக்கப்படும். இதன் மூலம் பஞ்சாப்பில் சுற்றுச் சூழல் பாதிப்பு இல்லாத விவசாயம் மேற்கொள்ளப்படும்.


இந்த வருடம் ஜீலை, ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களில் 22 டன் வேப்பங் கொட்டை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்த பூச்சி மருந்து தயாரிக்கப்பட்ட பிறகு, பல்கலைக் கழகத்தை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகளின் கூட்டம் நடத்தப்படும். இதில் பல்கலைக் கழக ஊழியர்கள், ரசாயண உரத்தை பயன்படுத்துவதால் நிலத்தடி நீர், மண் வளம், உணவு தானியங்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி விளக்குவார்கள்.


இவர்களுக்கு இயற்கை பூச்சி மருந்து பயன்படுத்த வேண்டிய முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு உண்டாக்குவார்கள். இதே போல் பல்கலைக் கழகத்திலும் விவசாயிகளின் கூட்டங்கள் நடத்தி விளக்கப்படும் என்று தெரிவித்தார்.

Friday, September 26, 2008

புதிய சான்றிதழ் படிப்புக்கள்

வேளாண் பல்கலையில் புதிய சான்றிதழ் படிப்புக்கள் அறிமுகம்!
வேளாண்சார் தொழில்நுட்பங்களில் 5 புதிய சான்றிதழ் படிப்புகளை கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த பல்கலைக் கழகத்தின் தொலைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ், நில எழிலூட்டல், அலங்காரத் தோட்டம் அமைத்தல், நாற்றங்கால் தொழில்நுட்பம், வணிகரீதியிலான தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள், நவீன களை மேலாண்மை, மண்வள மேலாண்மை ஆகிய சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகிறது.
வேளாண்சார் தொழில்களை துவங்கும் வகையில் இப்பாடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த நவம்பரில் பாடங்கள் துவங்கப்படும்.
இந்த சான்றிதழ் படிப்புக்களில் ஆங்கிலத்தில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் சேரலாம்.
இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் இயக்குநர், தொலைநிலைக் கல்வி இயக்ககம், வேளாண் பல்கலைக்கழகம், கோவை - 641003 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி எண்கள் 0422-6611229, 6611429
நன்றி-

Monday, September 22, 2008

கோழி வகைகள்

மத்திய பறவை
ஆராய்ச்சி நிறுவன (CARI)-த்தின்

இனங்கள் நாட்டுக் கோழி வகைகள்


கரி-நிர்பீக் (ஏசெல் கலப்பு)






  • உண்மை அல்லது தூய்மை என்பதே “ஏசெல்” என்பதன் அர்த்தம் ஆகும். 
    இவ்வகை கோழிகள், சக்திவாய்ந்த, உறுதியான, திடமான வெளித்தோற்றம், கம்பீரமான
    நடை, உறுதியான சண்டை போடும் திறன் கொண்டவை.  இதன் சண்டை போடும்
    திறனைக் கொண்டே ஏசெல் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
  • இதன் தோற்றம் ஆந்திரப் பிரதேச மாநிலம் எனத் தெரிகிறது.  இவ்வகை
    மிகவும் அரிதாகக் இருந்தாலும் சேவல் சண்டைக் காட்சி நடத்துபவர்களிடம்
    காணப்படுகிறது.
  • ஏசெல் இனம், திடகாத்திரமான, மதிப்பான பார்வை கொண்ட இனமாகும்.
  • சேவல் எடை 3-4 கிலோவாகவும், கோழி எடை 2-3 கிலோவாகவும் உள்ளது.
  • 196 நாட்களில் பருவம் அடைகிறது.
  • வருட முட்டை உற்பத்தி (எண்ணிக்கை) 92
  • 40வது வாரத்தில் முட்டை எடை (கிராம்) 50

கரி-சியாமா (கடகநாத் கலப்பு)





பொதுவாக “கலாமாசி” என்று அழைக்கிறார்கள்.  கருப்பு சதையுடைய பறவை
என்பது இதன் அர்த்தம்.  மத்திய பிரதேச மாநில தாபுவா மற்றும் தார்
மாவட்டமும் அருகில் உள்ள ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநில மாவட்டமும்,
அதாவது 800 சதுர மைல் பரப்பு இவ்வகை இனத்தின் தோற்றம் ஆகும்.


  • பழங்குடியினர், ஆதிவாசிகள், ஏழை கிராம மக்கள் ஆகியோர் இவ்வகைக்
    கோழிகளை வளர்க்கின்றனர்.
  • சேவல் பலிக்காக பயன்படுகிறது.  அதாவது தீபாளிக்குப் பின்
    கடவுளுக்கு பலி கொடுக்கப்படுகிறது.
  • கோழிக் குஞ்சுகள் நீலம் மற்றும் கருப்பு நிறத்துடன், பிற்பகுதியில்
    கருப்பு கோடுகளுடன் காணப்படுகிறது.
  • கறி கருப்பாக, பார்வைக் ஏற்றதாக இல்லாமல் இருந்தாலும், சுவையாகவும்,
    மருத்துவ குணங்கள் நிறைந்தும் காணப்படுகிறது.
  • பழங்குடியினர், கோழி இரத்தத்தையும், கறியையும், கடும் நோய்களுக்கு
    மருந்தாக பயன்படுத்துகின்றனர்.
  • கறி மற்றும் முட்டையில் நல்ல புரதச் சத்தும் (25.47% கறியில்)
    இரும்புச் சத்தும் உள்ளது.
  • உடல் எடை  40 வாரத்தில் 920 கிராம்
  • பருவ வயது (நாட்கள்) - 180
  • வருட முட்டை உற்பத்தி எண்ணிக்கை - 105
  • முட்டை எடை 40 வாரத்தில் (கிராம்) - 49
  • கருவுற்றல் (%) -  55
  • கோழிக்குஞ்சு பொரிக்கும் திறன்  - 52 %

ஹிட்கரி (நேக்கட் நெக் கலப்பு)



  • நீலமான உருண்டை வடிவ கழுத்துடைய இனமாகும்.  பெயரில் உள்ளது போல்,
    பறவைகளின் கழுத்து வெறுமையாக உள்ளது.  அல்லது, கழுத்தின்
    முற்பகுதியில் கொத்தாக சிறகுகள் உள்ளன.
  • பருவ நிலையை அடையும் பொழுது, சேவலின் தோல் சிவப்பு நிறத்திற்கு
    மாறிவிடுகிறது.
  • கேரளாவின், திருவனந்தபுரப் பகுதி இவ்வகை இனத்தின் தோற்றம் ஆகும்.
  • 20 வாரத்தில் உடல் எடை 1005 கிராம்
  • பருவ வயது (நாட்கள்) -  201
  • 40 வாரத்தில் முட்டை எடை - 54 கிராம்
  • கருவுற்றல் (%) - 66
  • கோழிக்குஞ்சு பொறிக்கும் திறன் (%) - 71

யு.பி.-கரி (பிரிசில் கலப்பு)


Frizzle Cross.JPG


  • துப்புரவு குணமுடைய, உள்நாட்டு தோற்றமுடைய, நமது சுழலுக்கு ஏற்ற, நோய்
    எதிர்ப்பு திறன் கொண்ட, நல்ல வளர்ச்சியும், உற்பத்தி திறனும் கொண்ட
    இனமாகும்.
  • வீட்டிலியே வளர்ப்பதற்கு ஏற்ற இனமாகும்.
  • வெவ்வேறு வேளாண் காலநிலைக்கு ஏற்ற 4 இரகங்கள் உள்ளன.

    1. கடகநாத் - டெல்கம் ரெட் கலப்பு
    2. ஏசெல் - டெல்கம் ரெட் கலப்பு
    3. நேகட் நெக் - டெல்கம் ரெட் கலப்பு
    4. பிரிசில் - டெல்கம் ரெட் கலப்பு

குணாதிசயங்கள்


  • பருவ வயது  : 170 - 180 நாட்கள்
  • வருட முட்டை உற்பத்தி 165-180 முட்டைகள்
  • முட்டை எடை - 52-55 கிராம்
  • முட்டை நிறம் : காப்பி நிறம்
  • முட்டை தரம் :  உயர்ந்த தரம்
  • உயிர்த்திறன் : 95% மேல்
  • சுறுசுறுப்பானது, செடிகளை உண்ணும் குணமுடையது.
முட்டைக்
கோழிகள்


கரிப்பிரியா முட்டைக்
கோழி



  • 17-18 வாரம் முதல் முட்டையிட துவங்குகிறது.
  • 150 நாட்களில், 50% உற்பத்தியை அடைகிறது.
  • 26-28 வாரத்தில் அதிக பட்சம் உற்பத்தியாகிறது.
  • வளர்ப்பு கோழி மற்றும் முட்டைக் கோழியின் வாழ்வுத்திறன் 96% மற்றும்
    94%
  • அதிகபட்ச முட்டை உற்பத்தி (92%)
  • 72 வாரமான கோழி 270 முட்டைகளுக்கு மேல் இடுகிறது.
  • முட்டை அளவு - சராசரியான அளவு
  • முட்டை எடை - 54 கிராம்

கரி-சோனாலி முட்டைக் கோழி (கோல்டன்-92)





  • 18-19 வாரம் முதல் முட்டையிட துவங்குகிறது.
  • 155 நாட்களில் 50% உற்பத்தியை அடைகிறது.
  • 27-29 வாரத்தில், அதிகபட்ச உற்பத்தியாகிறது
  • வளர்ப்பு கோழி மற்றும் முட்டைக் கோழியின் வாழ்வுத் திறன் 96% மற்றும்
    94%.
  • அதிகபட்ச முட்டை உற்பத்தி - 90%
  • 72 வாரக் கோழி 265 முட்டைகளுக்கு மேல் இடுகிறது.
  • முட்டை அளவு       
    :         சராசரியான அளவு
  • முட்டை எடை 54 கிராம்

கரி- தேவேந்திரா

  • நடுத்தர வயதுடைய இருவகைப் பயனுடையது.
  • நல்ல உணவு மாற்றும் விகிதம் கொண்ட இனமாகும்.  உணவுச் செலவிற்கு
    மேல் அதிகமான வரவு கிடைக்கிறது.
  • மற்ற இனங்களை விட உயர்ந்தது. முட்டை பண்ணைகளில் குறைவான இறப்பு
    விகிதம்
  • 8வது வாரத்தில் உடல்
    எடை         1700 - 1800
    கிராம்
  • பருவ வயது  
                      
    :          155 - 160
    நாட்கள்
  • வருட முட்டை உற்பத்தி     
    :         190 - 200

கறிக்கோழிகள்

கரிப்ரோ - விஷால் (கரிப்ரோ-91)





  • முதல் நாளில் கோழியின் எடை 43 கிராம்
  • 6வது வாரத்தில் எடை : 1650 - 1700 கிராம்
  • 7வது வாரத்தில் எடை :  2100 - 2200 கிராம்
  • கோழிகளின் உயிர்பு விகிதம் : 97-98%
  • 6வது வாரத்தில் உணவு மாற்று விகிதம் : 1.94 - 2.20

கரி-ரெயின்ப்ரோ (பி -77)



  • முதல் நாளில் கோழியின் எடை 41 கிராம்
  • 6வது வாரத்தில் எடை  :   1300 கிராம்
  • 7வது வாரத்தில் எடை :   1600 கிராம்
  • கோழிகளின் உயிர்பு விகிதம்  : 98-99%
  • 6வது வாரத்தில் உணவு மாற்று விகிதம்  :  2.3

கரிப்ரோ - தன்ராஜா (பல நிறம் கொண்டவை)





  • முதல் நாளில் கோழியின் எடை 46 கிராம்
  • 6வது வாரத்தில் எடை  :  1600 - 1650 கிராம்
  • 7வது வாரத்தில் எடை  :  2000 - 2150 கிராம்
  • கோழிகளின் உயிர்பு விகிதம்  :  97-98%
  • 6வது வாரத்தில் உணவு மாற்று விகிதம் :  1.90 - 2.10

கரிப்ரோ - மிருத்துஞ்சை (கரி நேகட் நெக்)





  • முதல் நாளில் கோழியின் எடை 42 கிராம்
  • 6வது வாரத்தில் எடை   :   1650 - 1700 கிராம்
  • 7வது வாரத்தில் எடை  :   2000 - 2150 கிராம்
  • கோழிகளின் உயிர்பு விகிதம்  :  97-98%
  • 6வது வாரத்தில் உணவு மாற்று விகிதம்  :  1.9 - 2.0
ஜப்பானியக்
காடை





ஜப்பானியக் காடை கடந்த சில வருடங்களாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் முட்டை மற்றும் கறிக்காக பல காடை பண்ணைகள்
உருவாகியுள்ளன.  தரமான இறைச்சிக்கான விழிப்புணர்வே இதற்கு
காரணம்.

கீழ் கண்ட காரணிகள், காடை வளர்ப்பை பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப
ரீதியாகவும் எளிமையாக்கி உள்ளன


  • மிகக் குறைவான சந்ததி இடைவெளி
  • அதிக நோய் எதிர்ப்பு திறன் கொண்டவை
  • தடுப்பூசி தேவையில்லை
  • குறைவான இடவசதி இருந்தால் போதுமானதாகும்
  • கையாளுவற்கு எளிமை
  • குறுகிய காலத்தில் பருவமடைதல்
  • அதிக அளவில் முட்டையிடும் திறன் - பெண் காடைகள் 42 நாட்களில்
    முட்டையிட துவங்குகின்றன

கரி-உத்த
ம்


  • மொத்த முட்டை பொரிப்புத்திறன்  :   60 - 76%
  • 4 வார எடை   :   150 கிராம்
  • 5 வார எடை :   170 - 190 கிராம்
  • 4 வாரத்தில் தீவனத்திறன்  :  2.51
  • 5 வாரத்தில் தீனவ திறன் :   2.80
  • அன்றாடம் உட்கொள்ளும் தீவன அளவு : 25 - 28 கிராம்

கரி-உஜாவால்


  • மொத்த முட்டைகளின் பொரிப்பு திறன்    
    :   65%
  • 4 வார எடை  :   140 கிராம்
  • 5 வார எடை :   170 - 175 கிராம்
  • 4 வாரத்தில் தீவனத்திறன்  :   2.93
  • அன்றாடம் உட்கொள்ளும் தீவன அளவு : 25 - 28 கிராம்

கரி-ஸ்வேதா


  • மொத்த முட்டைகளின் பொரிப்பு திறன்  :  50-60 %
  • 4 வார எடை    :   135 கிராம்
  • 5 வார எடை :   155-165  கிராம்
  • 4 வாரத்தில் தீவனத்திறன்   :  2.85
  • 5 வாரத்தில் தீனவ திறன்  :   2.90
  • அன்றாடம் உட்கொள்ளும் தீவன அளவு : 25 கிராம்

கரி-பியர்ல்


  • மொத்த முட்டைகளின் பொரிப்பு திறன்  :    65
    - 70 %
  • 4 வார எடை   :    120 கிராம்
  • அன்றாடம் உட்கொள்ளும் தீவன அளவு : 25 கிராம்
  • 50% முட்டை உற்பத்தி வயது :    8 - 10 வாரம்

முட்டை உற்பத்தி      :    285 -
295 முட்டைகள்


கினி
கோழி





  • பெரிதும் நகர்ந்து செல்லக்கூடிய பறவைகள்
  • சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஏற்றது
  • காதம்பரி, சிதம்பரி மற்றும் ஸ்வேதாம்பரி என்ற 3 இரகங்கள் உள்ளன.

சிறப்பு குணங்கள்


  • கடினமாக பறவை
  • அனைத்து வேளாண்கால நிலைக்கும் ஏற்றது
  • குஞ்சுகளைத் தாக்கக்கூடிய அனைத்து வகை நோய்களுக்கும் எதிர்ப்புத்
    திறன் கொண்டவை
  • பெரிய செலவிலான பண்ணைக்கு அவசியமில்லை. நன்குமேயும் திறன்
    கொண்டவை
  • கோழித் தீவனத்திற்கு பயன்படாத அனைத்து வகையான தீவனங்களையும்
    கினிகோழிக்குப் பயன்படுத்தலாம்
  • பூசணம் மற்றும் அப்லோடாக்சின் நச்சை தாங்கவல்லது
  • கடினமான முட்டை ஓடு, முட்டை உடைவதைக் குறைப்பதோடு, நீண்ட நாள்
    வைத்துக் கொள்ளவும் உதவுகிறது
  • இறைச்சியில் அதிக அளவு வைட்டமின் சத்தும், குறைவான கொழுப்புச் சத்தும்
    உள்ளது.

உற்பத்தி பண்புகள்


  • 8 வாரத்தில் எடை  :  500 -  500 கிராம்
  • 12 வாரத்தில் எடை  :   900 -  1000
    கிராம்
  • முதல் முட்டையிடும் வயது  :  230 - 250 நாட்கள்
  • சராசரி எடை :   38 -  40 கிராம்
  • முட்டை உற்பத்தி (ஒரு சுழற்சி மார்ச் - செப்டம்பர்) 100 - 120
    முட்டைகள்
  • கருவுற்றல் 70 -  75%
  • கருவுற்ற முட்டைகளின் பொரிப்புத் திறன் 70 -  80%

வான்
கோழி


கரி-விரட்




  • அகன்ற மார்புடைய வெள்ளை வகை
  • 16 வாரத்தில், கோழிகள் 8 கிலோ எடையும், ஆண் வகைகள் 12 கிலோ எடையும்
    இருக்கும் பொழுது இறைச்சிக்காக விற்கப்படுகிறது.
  • உள்ளுர் சந்தையின் தேவைப்கேற்ப, குறுகிய வயதுடைய வான்கோழிகளை வெட்டி
    வறுப்பதற்கு பயன்படுத்தலாம்.

இனங்கள் பற்றிய விபரங்கள் தெரிய

இயக்குநர்

மத்திய பறவை ஆராய்ச்சி நிறுவனம்,

இசாட்நகர், உத்திரபிரதேசம்

பின்கோடு - 243122

 மின்னஞ்சல் - cari_director@rediffmail.com  

தொலைபேசி - 0581 - 23013220; 2301320;  2301320;  2303223;
 2300204

தொலைநகல் :        
91-581-2301321.


>ஐ.சி.ஏ.ஆர்.
கோழி ஆராய்ச்சித் திட்ட மையத்தின் இனங்கள்


வனராஜா





  • கிராமம் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில், வீட்டுப் பண்ணைகளில்
    வளர்ப்பதற்கு ஏற்றது.  ஐதராபாத்-தில் உள்ள ஐ.சி.ஏ.ஆர்.-கோழி
    ஆராய்ச்சி திட்டம், இதனை வெளியிட்டுள்ளது.
  • பல வண்ணங்களில், கவர்ச்சியான இறகுகளைக் கொண்ட இது ஒரு பயனுள்ள
    பறவையாகும்.
  • அனைத்து வகையான நோய்களுக்கும் எதிர்ப்பு திறன் கொண்டதாகும். 
    வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்றதாகும்.
  • வனராஜா ஆண் இனங்கள், முறையாக தீவன முறைதில் 8 வாரத்தில் நல்ல எடையை
    அடைகின்றன.
  • ஒரு பருவ சுழற்சியில், ஒரு கோழி 160-180 முட்டைகள் இடுகின்றது.
  • குறைவான எடையும், நீண்ட கால்களும் பெற்றிருப்பதால், இவை மற்ற இரைக்
    கொல்லிகளிடம் இருந்து தப்பி ஓடிவிடும். வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்றவையாக
    உள்ளன.

கிரிஷிப்ரோ





  • ஐதராபாத்-தில் உள்ள ஐ.சி.ஏ.ஆர்.-கோழி ஆராய்ச்சி திட்டம் இதனை
    உருவாக்கியுள்ளது.
  • பல வகை நிறங்கொண்ட கறிக் கோழியாகும்
  • 6 வாரத்தில் உடல் எடையை அடைகிறது.  இதன் தீவன மாற்று விகிதம் 2.2
    ஆகும்
  • 97% கோழிகள் 6 வாரம் வரை உயிருடன் இருக்கின்றன
  • பறவைகள் கவர்ச்சியான இறகுகளுடன் உள்ளன.  வெப்ப மண்டல
    பகுதிகளுக்கு ஏற்றதாகும்
  • வணிக ரீதியாக வளர்க்கப்படும் கிரிஷிப்ரோ ரகம் ராணிக்கெட் மற்றும் பிற
    தோற்று  நோய்களுக்கு எதிர்ப்பு திறன் கொண்டவை ஆகும்
  • நன்மைகள்    : கடினமான, சூழலுக்கு ஏற்று வாழக்கூடிய,
    அதிக உயிர்வாழ் திறன் கொண்டவையாக இருக்கின்றன.

மேற்கண்ட இன கோழிகளைப் பெற கீழ்க்கண்ட முகவரியை அணுகவும்.

Director

Project Directorate on Poultry

Rajendra Nagar, Hyderabad - 500030

Andhra Pradesh,
INDIA
.

Phone :- 91-40-24017000/24015651

Fax : - 91-40-24017002

E-mail: pdpoult@ap.nic.in


கர்நாடகா
கால்நடை மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக் கழகம், வெளியிட்டுள்ள
இரகங்கள்.

கிரிராஜா





பெங்களுரில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கோழி
ஆராய்ச்சித்துறை இதனை வெளியிட்டுள்ளது.





சுவர்ணதாரா

இவ்வினம் கிரிராஜா வகையைவிட ஆண்டுக்கு 15-20 முட்டைகள் அதிகமாக
இடுகின்றன.  இதனை கர்நாடகா கால்நடை மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகம்
2005ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளது.  சுவர்ணதாரா கோழிகள் அதிக முட்டை
உற்பத்தி செய்வதுடன், உள்ளுர் ரகங்களைவிட நன்றாக வளர்கிறது.  இது
கலப்பு பண்ணையத்திற்கும், வீட்டில் வளர்ப்பதற்கும் ஏற்றதாகும்.


  • கிரிராஜா இனத்தைவிட சிறிதாகவும், எடை குறைவாகவும் இருப்பதால்,
    காட்டுப் பூனைகள், நரிகளிடம் இருந்து எளிதில் தப்பி விடுகின்றன.
  • முட்டை, இறைச்சி ஆகிய இரண்டிற்காகவும் வளர்க்கலாம்.
  • பொரித்த 22-23 வாரத்தில் பருவமடைகிறது.
  • கோழி 3 கிலோ எடையையும், சேவல் 4 கிலோ எடையையும் அடைகின்றன.
  • கோழிகள், ஒரு வருடத்திற்கு 180-190 முட்டைகள் ஈடுகின்றன.

மேற்கண்ட இன கோழிகளைப்
பெற கீழ்க்கண்ட முகவரியை அணுகவும்


Prof and Head,

Department of Avian Production and Management,

Karnataka Veterinary Animal Fishery Sciences University,

Hebbal, Bangalore: 560024,

Phone: (080) 23414384 or 23411483 (ext)201.

பிற உள்நாட்டு
இனங்கள்





இனம்- இடம்

அங்களேஷ்வர்- குஜராத்

அசீல்- ஆந்திரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம்

பர்சா- குஜராத் மற்றும் மஹாராஷ்ட்ரா

சிட்டாகாங்- மேகாலயா மற்றும் திரிபுரா

டங்கி- ஆந்திரபிரதேசம்

தவோதிகிர்- அசாம்

காகஸ்- ஆந்திரபிரதேசம் மற்றும் கர்நாடகா

ஹர்ரிங்காடா கருப்பு- மேற்கு வங்காளம்

கதக்நாத்- மத்தியபிரதேசம்

காலஸ்தி- ஆந்திரபிரதேசம்

காஷ்மீர் பவிரோலா- ஜம்மு மற்றும் காஷ்மீர்

மிரி- அசாம்

நிக்கோபாரி- அந்தமான் மற்றும் நிக்கோபார்

பஞ்சாப் பிரெளன்- பஞ்சாப் மற்றும் அரியானா

தெள்ளிச்சேரி- கேரளா



தகவல் ஆதாரம் --இந்திய முன்னேற்ற நுழைவாயில்http://www.indg.in/

Thursday, August 28, 2008

கறிக்கோழி வளர்ப்பு



கோழிக்கறி வகைகளில் அதிகம் விரும்பப்படுவது கறிக்கோறி (ப்ராய்லர்) வகையாகும். பல தனியார் நிறுவனங்கள் விவசாயிகளுடன் இணைந்து ஒப்பந்த முறையில் கறிக்கோழி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். விற்பனையில் எந்தவித சிரமமும் இல்லை. மிருதுவான, மென்மையான சதையை உடைய 1.5-2.0 கிலோ எடையுள்ள 8 வார வயதிற்கு கீழ் உள்ள கோழிகளை ப்ராய்லர் என்கிறோம்.

சிறந்த பராமரிப்பு முறைகள்
கோழிக் கொட்டகையின் வெப்பநிலை: முதல் வாரத்தில் 950 சி இருக்க வேண்டும். பின்பு ஒவ்வொரு வாரமும் 50 சி வெப்பத்தை குறைக்க வேண்டும். 6-ஆவது வாரம் 700 சி வெப்பம் வரும் வரை குறைக்க வேண்டும்.
காற்றோட்ட வசதி : கோழிக் கழிவிலிருந்து வெளிப்படும் அமோனியாவை நீக்கி மூச்சுத்திணறல் வராமல் தடுக்க நல்ல காற்றோட்டத்தைப் பராமரிக்க வேண்டும்.
மின்விளக்கின் மூலம் வெப்பம் அளித்தல்: 200 சதுர அடி தரையளவிற்கு 60 வாட் விளக்குகள் போட வேண்டும்.
தரை இடஅளவு : ஒரு கோழிக்கு 1 சதுர அடி
மூக்கு வெட்டுதல்:1 நாள் வயதுடைய குஞ்சுகளுக்கு மூக்கை வெட்ட வேண்டும்.
கறிக்கோழி (ப்ராய்லர்) சுகாதாரப் பராமரிப்பு
· நோயற்ற குஞ்சுகளைக் கொண்டு தொடங்க வேண்டும்
· மேரக் நோயைத் தடுக்க குஞ்சு பொறிப்பகத்திலேயே தடுப்பூசி போட வேண்டும்.
· 4-5 நாட்களில் ஆர்.டி.வி.எப். 1 போட வேண்டும்.
· கழிச்சல் (காக்கிடியாசிஸ்) நோயினைத் தடுக்க தீவனத்துடன் மருந்துகளைக் கலந்து கொடுக்க வேண்டும்.
· பூஞ்சாண நச்சுகளிலிருந்து தீவனத்தைப் பாதுகாக்க வேண்டும்.
· தரையில் 3 இஞ்ச் ஆழத்திற்கு நிலக்கடலை கழிவு அல்லது நெல் உமி கொண்டு நிரப்ப வேண்டும்.
விற்பனை செய்தல்· 6-8 வாரங்கள் வயதுடைய கோழிகளை விற்பனை செய்ய வேண்டும்.
· கோழிகளைப் பிடிக்கும் போது, காயங்கள் ஏற்படாமல் இருக்க, தீவனத் தட்டுகளையும், தண்ணீர் தட்டுகளையும் அகற்ற வேண்டும்.
· திடீர் வானிலை மாற்றங்களிலிருந்து கோழிகளைக் காக்க வேண்டும்.

சுகுணா (கோயமுத்தூர்), வெங்கடேஸ்வரா (பூனா), பயனியர், ப்ரோமார்க் போன்ற தனியார் நிறுவனங்கள், ஒப்பந்த முறையில் விவசாயிகளுடன் இணைந்து கறிக்கோழி உற்பத்தி செய்கின்றன. மேலும்,
· சிறந்த இனங்கள் கிடைக்குமிடம்
· கோழிக் கொட்டகை அமைத்தல்
· தீவனம் அளித்தல்
· நல்ல வளமான கோழிகளை உருவாக்குதல்
போன்றவற்றில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அருகில் உள்ள கால்நடை பராமரிப்பகத்தையோ அல்லது வேளாண் அலுவலகத்தையோ அணுகவும்.

தகவல் ஆதாரம் --இந்திய முன்னேற்ற நுழைவாயில்http://www.indg.in/

Friday, June 13, 2008

இந்திய முன்னேற்ற நுழைவாயில்


இண்-டி-ஜி (இந்தியா டெவலப்மெண்ட் கேட்வே) என்பது கிராமப்புறம் மற்றும் சமூக வளர்சிக்கான குறிப்பான தேவைகளை இலக்காக வைத்துச் செயல்படும் நாடு தழுவிய அளவில் நடக்கும் ஒரு முயற்சி. இந்த கேட்வே இந்தியாவின் தேசிய வலையகம். இதன்மூலம் தகவல்கள் மற்றும் சேவைகள் பற்றி அறியலாம். இதுவரையில் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும் இந்திய கிராமப்புற சமூகங்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் ஏழைகளைச் சென்றடைவதுதான் இதன் நோக்கம்.
கிராமப்புறச் சமூகங்களுக்கு, குறிப்பாக ஒதுக்கப்பட்ட மக்கள் மற்றும் ஏழைகளுக்கு அவர்களுடைய உண்மையான, முக்கியமான தேவைகளுக்கான உற்பத்திப் பொருள்கள் மற்றும் சேவைகள் பற்றிய நம்பகமான தகவல்களை அவர்கள் மொழியிலேயே தருவதே கேட்வேயின் குறிக்கோள். அறிவுப் பகிர்வுக்காகத் தகவல் தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தி வளர்ச்சி காண இது வழிவகுக்கும்.
இந்த பன்மொழி வலைதளம் உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம் (சி. டாக) -்கின் ஐதராபாத் அலுவலகத்தால் செயலாக்கப்படுகிறது.
உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம் (சி. டாக்), இந்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் நுண்பொறி அமைச்சகத்தால் (முன்பு மின்னியல் துறை), 1988-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட ஒர் அறிவியல் சங்கமாகும். மின்னியல் மற்றும் மேம்பட்ட தகவல் நுண்பொறி சம்பந்தமான துறையில், உருவாக்கம், மேம்பாடு மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகமாக சி. டாக் செயல்பட்டு வருகிறது. தகவல் நுண்பொறி துறையில் இந்தியாவின் பெருமைகளில் ஒன்றான ‘பரம்’ அதிநவீன கணினிகள் சி. டாக்-ஆல் உருவாக்கப்பட்டவை. சி. டாக்கின் ஐதராபாத் அலுவலகம், மென்பொருள்-பாதுகாப்பு, மின்வழிக்கல்வி, பண்டமாற்று மேலாண்மை, இலவச மென்பொருள்கள் மற்றும் மென்பொருள் பொருந்திய கருவிகளின் பயன்பாடுகள் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.

Monday, March 3, 2008

கந்து வட்டியும் கடன் தள்ளுபடியும்




நமது நாட்டின் விவசாயிகளை கடன் சுமையிலிருந்து மீட்க, கூட்டுறவு வங்கிகளிலிருந்து அரசு வங்கிகள் வரை சிறு, நடுத்தர விவசாயிகள் வாங்கியுள்ள கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று நிதி நிலை அறிக்கையில் அறிவித்திருப்பது மன மகிழ்ந்து வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், அது தொடரும் தற்கொலைகளைத் தடுக்குமா என்பதுதான் இன்னமும் பதில் காண முடியாத கேள்வியாகவுள்ளது. இரண்டு ஹெக்டேர் (5 ஏக்கர்) வரை நிலம் வைத்துள்ள சிறு, நடுத்தர விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய ரூ.50,000 கோடியும், இதர விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய ரூ.10,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் 4 கோடி விவசாயிகள் பலனடைவார்கள் என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். இந்தக் கடன் தள்ளுபடி தங்களுக்குப் பயனளிக்கப் போவதில்லை என்று, விவசாயிகள் அதிகமாக தற்கொலைகள் செய்து கொள்ளும் மராட்டிய மாநிலம் விதர்பா பகுதி விவசாயிகள் கூறியுள்ளனர். கடன் சுமையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெரும்பான்மையோருக்கு 5 ஏக்கருக்கும் அதிகமாகத்தான் நிலம் உள்ளது என்றும், நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வரையறையால் தங்களுக்கு அந்த நிவாரணம் கிடைக்கப் போவதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.இது மிகவும் கவனிக்கத் தக்கதாகும். கடன் சுமையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குள்ள நிலங்களின் அளவை கணக்கில் கொள்வதற்கு பதிலாக, அவர்கள் கடன் சுமையிலிருந்து விடுபட இயலாத காரணியை அடிப்படையாகக் கொண்டு - உதாரணத்திற்கு, விதர்பா பகுதியில் பாதிப்பிற்குள்ளான விவசாயிகள் பருத்தி பயிர் செய்து கடன் பட்டவர்கள் - கடன் நிவாரணம் அளிப்பது சரியாக இருக்கும்.

மராட்டியத்திலிருந்து ஆந்திரம் வரை கடன் சுமையிலிருந்து விடுபட வழியில்லாமல் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட விவசாயிகளில் பெரும்பான்மையோர் கந்து வட்டிக் கடன் பட்டவர்களாவர். மாதத்திற்கு 3, 5, 7 விழுக்காடு என்று சிறிய தொகையைப் பெற்று கடன் பட்டு, அதைக்கூட திருப்பிக் கட்ட முடியாமல் தூக்கில் தொங்கியவர்களே அதிகம்.விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு செத்த கணக்கை தேச குற்றப் பதிப்பு வாரியம் (National Crime Records Bureau - NCRB) வெளியிட்டதைத் தொடர்ந்து எழுதிய கட்டுரையில் (‌சிற‌ப்பு தூ‌க்கு ம‌ண்டல‌ம்) தமிழ்.வெப்துனியா.கா‌ம் குறிப்பிட்டிருந்தபடி, வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும், பொதுத் துறை வங்கிகளிலும் பெற்ற கடன்களை த‌ள்ளுபடி செ‌ய்வது மட்டுமின்றி, கந்து வட்டிக்குப் பெற்ற கடன்களை மாநில அரசுகள் அவசர சட்டம் இயற்றி ரத்து செய்ய வேண்டும் என்று எழுதியிருந்தோம்.ஏனெனில் கந்து வட்டிக்குப் பெற்ற கடன்களை ரத்து செய்யாமல், தங்களை மரண வேதனையில் அழுத்திக் கொண்டிருக்கும் கடன் சுமையிலிருந்து விவசாயிகளை மீட்க முடியாது.எனவே, மராட்டியம், ஆந்திரம், கர்நாடகம், சட்டிஷ்கர், மத்திய பிரதேசம் மாநில அரசுகள் அனைத்தும் கந்து வட்டி அனைத்தையும் ரத்து செய்யும் அவசர சட்டம் பிறப்பிக்குமாறு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும்.இதைச் செய்யவில்லையெனில், தற்கொலைகள் தொடர்கதையாவதை முழுமையாகத் தடுக்க இயலாது.


Wednesday, February 27, 2008

முதல் உலக வேளாண் வர்த்தக கருத்தரங்கு 2008

முதல் உலக வேளாண் வர்த்தக கருத்தரங்கு 2008 - இந்தியாவில்
மத்திய வேளான், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு. ஷரத் பவார் மற்றும் ஐ.நா. சபையின் உணவு மற்றும் விவசாயக் கழகத்தின் இயக்குநர், டாக்டர். ஜாக்குவஸ் டையூஃப் ஆகியோர் இணைந்து, இந்தியா, இந்த உலக வேளாண் வர்த்தக கருத்தரங்கை-2008-ல் நடத்தும் என்று அறிவித்துள்ளனர்.இந்திய அரசு, ஐ.நா. சபையின் உணவு மற்றும் விவசாயக் கழகம் மற்றும் GAIF ஆகியவை இணைந்து இந்த கருத்தரங்கை நடத்துகிறது.இந்த கருத்தரங்கில், வறுமையை ஒழிக்க வேளாண் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக பேச்சு வார்த்தை நடத்தப்படும். இந்த கருத்தரங்கானது, வளர்ந்து வரும் நாட்டிலுள்ள சிறு விவசாயிகளுக்கான முன்னேற்றத்தை தரக்கூடிய வழி முறைகளை வகுக்கும். வேளாண் அமைச்சகம், தொழில் துறை அமைச்சகம் மற்றும் வேளாண் தொழில் துறை வல்லுனர்கள், தனியார் உணவு உற்பத்தி தொழில் மையங்களிலிருந்து சுமார் 500 அனுபவம் மிகுந்த நபர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்வர். மேலும் விவரங்களுக்கு, www.gaif08.org
தகவல் : http://www.pib.nic.in/release/release.asp?relid=29721